தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் சீர்திருத்த சட்டங்கள் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நமது தொழிலாளர்களின் நலனை உறுதி செய்து, பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்பதற்கும் இவை நிகழும் உதாரணங்களாகும்.
இந்த புதிய தொழிலாளர் சீர்திருத்தச் சட்டங்கள் குறைந்தபட்ச கூலியையும், சரியான நேரத்தில் ஊதியம் கொடுக்கப்படுவதையும் பொதுவானதாக்கி , தொழிலாளர்களின் பணிமுறை பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கின்றன. சிறந்த பணி சூழலுக்கு இந்த சீர்திருத்தங்கள் வழிவகுத்து, பொருளாதார வளர்ச்சியின் வேகத்தையும் அதிகரிக்கும்.
எளிதாக வணிகம் செய்வதை இந்த சீர்திருத்தங்கள் உறுதிப்படுத்தும். விதிகள், சிகப்பு நாடா முறை, அதிகாரிகள் ராஜ்ஜியம் ஆகியவற்றை இந்த தொலைநோக்கு சட்டங்கள் குறைக்கும். தொழிலாளர்கள் மற்றும் தொழில்கள் ஆகிய இரு தரப்பினரின் நலனுக்காகவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை இந்த சீர்திருத்தங்கள் ஊக்கப்படுத்தும்,” என்று கூறினார்.
இந்தமாதிரி மோடி அரசு சட்டம் கொண்டு வந்தால் உண்மையை தொழிலாளர்களிடம் கூறாமல் பொய் மட்டும் கூறிவரும் தொழில்சங்கங்களுக்கு மோடியரசு ஆப்பு வைத்துள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















