மோடி எதிர்ப்பாளர்களுக்கு பாட்டாலே விபூதியடித்த இளையராஜா..!

“நான் உனை நீங்க மாட்டேன்… நீங்கினால் தூங்க மாட்டேன்…என்னதான் என்ன பாடுவேன் உனக்காகவே… இந்த நாள் நன்னாள் என்று பாடு… என்னதான் இன்னும் உண்டு கூறு…”

ப்ளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேஷன் நிறுவனம் “மோடியும் அம்பேத்கரும்“ என்ற புத்தகத்தை வெளியிட்டது. அந்த புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதி உள்ளார்.

அந்த முன்னுரையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பற்றிய உண்மையை இளையராஜா உரக்கச் சொன்னது மோடி எதிர்ப்பாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக திமுகவினரும், திமுக கூட்டணி கட்சிகளும், அமைப்புகளும் தூக்கத்தை தொலைத்தன.

திருமாவளவன், கி.விரமணி, கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளும், கிறிஸ்தவ மத வெறி அமைப்புகளும் கைகோர்த்து இளையராஜாவை கரிந்து கொட்டின.

அதேநேரம் இளையராஜாவுக்கு ஆதரவாக தேசியவாதிகளும், உண்மையை உரக்கப் பேசும் நல்லவர்களும் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள்.பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

சினிமா துறையை சேர்ந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், இயக்குனர் அமீர் போன்றவர்கள் தங்களின் உச்சகட்ட மதவெறியை வெளிப்படுத்தினார்கள். அதேநேரம் இசையமைப்பாளர் தினா, இயக்குனர்கள் பாக்கியராஜ், பேரரசு போன்றவர்கள் இளையராஜாவின் கருத்தை ஆதரித்து ஆதாரங்களை அடுக்கினார்கள்.

பாக்கியராஜ் குறிப்பிடும்போது, “இந்தியாவுக்கு மோடி போன்ற எனர்ஜியான பிரதமர் தான் தேவை. பிரதமர் மோடி பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது. அவர் வெளிநாடு செல்வதை சிலர் கிண்டல் செய்கின்றனர். ஆனால் இந்த வயதில் அவரால் எப்படி இவ்வளவு எனர்ஜியாக இருக்க முடிகிறது என்று நான் வியப்படைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியா உலக அரங்கில் உயர்ந்து வருகிறது. அவரது திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளன. பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள்” என்று திராவிட கும்பல்களுக்கு அவர்களின் பாதையிலேயே பதில் கொடுத்தார்.

இயக்குனர் பேரரசு குறிப்பிடும்போது, பிரதமர் நரேந்திர மோடி தெய்வத் திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு இணையானவர் என்றார். “தேசியமும் தெய்வீகமும் என் இரு கண்கள்” என்றார் முத்துராமலிங்க தேவர். அதற்கு இணங்க வாழ்ந்து, நடைமுறைப்படுத்தி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்றார்.

இந்த நிலையில் பிள்ளையை கிள்ளி விட்டு விட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையாக இளையராஜாவுக்கு எதிராக வன்மத்தை அரங்கேற்றிய திமுக, அவரை விமர்சிக்க வேண்டாம் என்பது போன்று பொதுவெளியில் கருத்துக்களை பரப்பியது.

இது ஒருபுறம் இருக்க, திமுக எம்பி பாரிவேந்தர், பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி கருத்து வெளியிட்டுள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை மகாத்மா காந்திக்கு ஒப்பானவர் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

நமது நாட்டின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்களாக மகாத்மா காந்தி போன்றவர்கள் திகழ்ந்தார்கள். இப்போது நாம் வாழும் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டவராகத் திகழ்கிறார். நமது நாட்டின் வளர்ச்சிக்காக என்ன என்ன செய்ய வேண்டும் என்று இரவு பகலாக தூங்காமல் உழைத்து வருகிறார். இந்தியாவை தலை நிமிர்ந்து பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லும் பகலும் உழைத்து வரும் பெருமகன் அவர்.

சிறுபான்மையினருக்கு எதிராக நபர் பிரதமர் மோடி என்று பிரச்சாரம் பண்ணுகிறார்கள் அது சரியல்ல தமிழகத்தை விட உத்தரபிரதேசத்தில்தான் சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் எம்எல்ஏக்களாக உள்ளனர். இல்லாத ஒன்றை உருவாக்கி பிரதமர் நரேந்திர மோடியை சிறுபான்மையின மக்களுக்கு எதிரி போல தமிழகத்தில் கட்டமைத்து வருகிறார்கள். அது நீண்ட காலம் நிலைக்காது. இதே தமிழகம் பிரதமர் நரேந்திர மோடியை நேசிக்கும், பாராட்டும். அந்த காலம் விரைவில் வரும்.

எந்த ஒரு போட்டித் தேர்வையும் எதிர்கொள்ளும் விதமாக நமது அடிப்படைக் கல்வி வலுவாக இருக்க வேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் கல்வி மாறுபட்டால் போட்டித் தேர்வுகளை எழுதுவது சிரமம் ஆகிவிடும். அதைத்தான் நீட் தேர்வில் நாம் சந்தித்து வருகிறோம். எது செய்தாலும் அது மாணவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவதாக இருக்க வேண்டும். எனவே நீட் தேர்வு கடினமாக இருந்தாலும் அதனை நாம் ஏற்க வேண்டும். போட்டித் தேர்வுகளால் மட்டுமே சமூகநீதியை நிலைநாட்ட முடியும்.

இவ்வாறு பாரிவேந்தர் கூறினார் .

இந்த நிலையில் இசைஞானி இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி படத்தில் வரும் “நான் உன்னை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்” என்ற பாடலை தனது குரலில் மாற்றிப் பாடி பதிவேற்றம் செய்து அனைத்து மோடி எதிர்ப்பாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை பதிலடி கொடுத்துள்ளார்.

“நான் உனை நீங்க மாட்டேன்… நீங்கினால் தூங்க மாட்டேன்…என்னதான் என்ன பாடுவேன் உனக்காகவே… இந்த நாள் நன்னாள் என்று பாடு… என்னதான் இன்னும் உண்டு கூறு…”

என்று பாடியுள்ளார்.

அந்த பாடலில் “பாடுவேன் உனக்காகவே… எந்த நாள் நன்னாள் என்று பாடு… என்னதான் இன்னும் உண்டு கூறு…” என்ற வரிகளை பிரதமர் நரேந்திர மோடிக்காக அவர் கூடுதலாக சேர்த்து பாடியுள்ளார்.

இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான தனது கருத்தில் இளையராஜா உறுதியாக உள்ளதை, நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளார்.

இது பிரதமர் நரேந்திர மோடி எதிர்ப்பு கும்பல்களுக்கு அடியில் நெருப்பு வைத்ததுபோல் அமைந்து உள்ளது.

=====

Exit mobile version