மோடி ஜோதிடத்தின் வழி காட்டுதல் படி செயல் படுகிறாரா என்று ஒரு கட்டுரையை இன்றைய டெக்கான் குரோனிக்கலில் வந்துள்ளது.
பிரதமர் மோடியின் ஒவ்வொரு செயலிலும் ஏதாவது ஒரு அர்த்தம் இருந்து வருகிறது என்பதற்கு இந்த ஊரடங்கு அறிவித்த நாட்களையே உதாரணமாக கூறலாம்.இந்தியாவில் ஒரு நாள் ஊரடங்கு என்று மோடி அறிவித்த நாள் மார்ச் 22 அன்றில்இருந்து தொடர்ந்து இன்று வரை இந்தி யா ஊரடங்கில் தான் இருக்கிறது.மார்ச் 22 ம் தேதி ஊரடங்கின் பொழுது நாம்மாலை 5 மணிக்கு கை தட்டினோம் அல்லவா..அப்பொழுது தான் செவ்வாய் இந்தியாவின் ராசியான மகர ராசிக்குள் நுழைந்தது.
சனியும் செவ்வாயும் ஒரே வீட்டில் இரு ந்தால் அங்கு நிச்சயமாக ஏழரை தான் இந்தியாவின் ராசியான மகரத்தில் சனி ஜனவரி மாதம் நுழைந்த உடனே சிஏஏ போராட்டங்கள் ஆரம்பிக்க அடுத்து மார்ச் 22 ல் செவ்வாய் நுழைய சனியின் வீரியம் குறைந்தது.
ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் தீபம் ஏற்றக்காரணமே 9 வது கோளான செவ்வாயை குளிர்விக்க தான்.இப்பொழு து ஏப்ரல் 14 ம்தேதி செவ்வாய் மீண்டும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவித்து இருக்கிறார் பிரதமர் மோடி.
அதாவது இந்தியாவில் மார்ச் 22 ல் ஆரம்பித்த ஊரடங்கு மே 3 ம் தேதி வரை இருக்கப் போகிறது. இதில் என்ன விசேசம் என்றால் மார்ச் 22ம் தேதியில் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு நுழையும் செவ்வாய் மே 3 ம் தேதி வரை மகர ராசியில் இருக்கிறது மே 4 ல் செவ்வாய் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறது.
அதற்குள் கொரானாவின் தாக்கத்தை செவ்வாய் குறைத்து விடுவார் என்று ஆன்மிகம் கூறுகிறது. அதனால் தான் இன்று வருகின்ற 20 ம் தேதியில் இருந்து ஊரடங்கு சில இடங்களில் விலக்கப்படும் என்று அறிவித்து இருக்கி றது மத்திய அரசு.
ஆக ஏதோ ஒரு ஜோதிட கணக்க்கோடு தான் மோடி செயல்பட்டு வருகிறார். அந்த கணக்கு பலிக்க எல்லை வல்ல இறைவ ன் துணை நிற்பார்.என நாமும் வீட்டிலிருந்து பிரார்த்திப்போம் விலகி இருப்போம் விழித்திருப்போம்

Get real time update about this post categories directly on your device, subscribe now.
















