சும்மாச்சுத்தல மோடி 6 ஆண்டுகளில் 108 நாடு பயணம்; இந்தியாவில் ரூ.14 லட்சம் கோடி முதலீடு.

“மோடி 108 வெளிநாட்டு பயணம்; வந்தது முதலீடு ரூ.14 லட்சம் கோடி”: டி, 2014 மே 26ல் பிரதமராக பதவியேற்றார். முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்றார். 60 நாடுகளுக்கு சென்றுள்ளார். சில நாடுகளுக்கு திரும்ப சென்றது சேர்த்து மொத்தம் 108 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆறுமுறை, பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுக்கு ஐந்து முறை சென்றுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்களின் விபரம்.

2014 ம் ஆண்டு

தேதி – நாடு – ஒப்பந்தம்/நோக்கம்

2015 ம் ஆண்டு

2016 ம் ஆண்டு –

மே 11-12 இலங்கை
திரிகோணமலையில் எண்ணெய் டாங்குகளை இந்தியா புனரமைக்க ஒப்பந்தம்.

மே 29-30 – ஜெர்மனி
இந்திய நகரங்களின் வளர்ச்சிக்கு 2022 வரை நிதி உதவி செய்ய ஜெர்மனி சம்மதம்.

மே 30-31 – ஸ்பெயின்
சைபர் பாதுகாப்புக்கான 7 ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இணைந்து செயல்படுதல்.

மே 31- ஜூன் 2 – ரஷ்யா
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்க ரூ. 3580 கோடிக்கு ஒப்பந்தம். கூடங்குளம் அணுமின்நிலையத்தின் 3,4வது யூனிட் திறப்பு. இந்தியாவில் சில அணுமின் நிலையத்தை திறக்க ரஷ்யா உதவி.

ஜூன் 2-3 – பிரான்ஸ்
இரு நாடுகள் உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை.

ஜூன் 8-9 – கஜகஸ்தான்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு.

ஜூன் 24 – போர்ச்சுகல்
தலைநகர் லிஸ்பனில் கேன்சர் ஆய்வு மையத்தை பார்வையிட்டார்.

ஜூன் 25-26 – அமெரிக்கா
அமெரிக்காவிடம் இருந்து ஆண்டுக்கு 5.8 மில்லியன் இயற்கை எரிவாயு வாங்க, 20 ஆண்டுக்கு ஒப்பந்தம்.

ஜூன் 27 – நெதர்லாந்து
கலாசாரம், சமூக பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்து.

ஜூலை 4-6 – இஸ்ரேல்
இரு நாடுகளுக்கு இடையே நீர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ஒப்பந்தம்.

ஜூலை 7-8 – ஜெர்மனி
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பு.

செப். 3-5 – சீனா
‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்பு.

செப். 6-7 – மியான்மர்
கடல்வழி பாதுகாப்பு தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல்,

நவ. 12-14 – பிலிப்பைன்ஸ்
கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்பு.
2018 ம் ஆண்டு

ஜன. 23-26 – சுவிட்சர்லாந்து
உலக பொருளாதார மாநாடு

பிப். 9 – ஜோர்டான்
பாரம்பரிய இசை, நடனம் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தம்.

பிப். 10 – பாலீஸ்தீனம்
ரூ. 358 கோடிக்கு ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்து.

பிப். 10-11 – அபுதாபி
முதல் ஹிந்து கோயிலுக்கு மோடி அடிக்கல். அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் சார்பில் இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தம். ரயில்வே துறையில் தொழில்நுட்பத்தை பரிமாறுதல்.

பிப். 11-12 – ஓமன்
சுகாதாரம், சுற்றுலா துறைகளில் இணைந்து செயல்படுதல்.

பிப். 16-18 – சுவீடன்
இந்தியாவில் ரூ. 100 கோடி முதலீடு செய்ய சுவீடன் சம்மதம்.

ஏப். 18-20 – பிரிட்டன்
காமன்வெல்த் ஹெட்ஸ் ஆப் கவர்மென்ட் கூட்டத்தில் பங்கேற்றார்.

ஏப். 20 – ஜெர்மனி
இரு நாடுகள் உறவு குறித்து பேச்சுவார்த்தை.

ஏப். 27-28 – சீனா
இரு நாடுகள் எல்லை இடையே அமைதியை பேணிக்காத்தல்.

மே 11-12 நேபாளம்
நேபாளத்தின் ஜானக்பூர்- உ.பி.,யின் அயோத்தி இடையே பஸ் போக்குவரத்து துவக்கம். கிழக்கு நேபாளத்தில் 900 மெகாவாட் நீர் மின்சார நிலையம் அமைக்க அடிக்கல்.

மே 21 – ரஷ்யா
சோச்சியில் அதிகாரப்பூர்வமற்ற மாநாட்டில் பங்கேற்பு.

மே 29 – இந்தோனேஷியா
பாதுகாப்பு, வர்த்தகத்தில் இணைந்து செயல்பட முடிவு.

மே 31 – மலேசியா
பாதுகாப்பு துறையில் இணைந்து செயல்படுதல்.

மே 31-ஜூன் 2 – சிங்கப்பூர்
கடற்படை பாதுகாப்பு, இந்திய பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை பின்பற்ற ஒப்பந்தம்.

ஜூன் 9-10 – சீனா
ஷாங்காய் கூட்டமைப்பில் பங்கேற்பு.

ஜூலை 23-24 – ருவாண்டா
200 பசுக்களை பரிசாக மோடி அளித்தார்.

ஜூலை 24 – உகாண்டா
உகாண்டா பார்லிமென்டில் உரை.

ஜூலை 25-27 – தென் ஆப்ரிக்கா
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு

ஆக. 30-31 – நேபாளம்
‘பிம்ஸ்டிக்’ மாநாட்டில் பங்கேற்பு.

அக். 28-29 – ஜப்பான்
சுகாதாரம், தொழில்நுட்ப துறைகளில் ஒப்பந்தம்.

நவ. 14-15 – சிங்கப்பூர்
கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்பு.

நவ. 17 – மாலத்தீவு
மாலத்தீவு பார்லிமென்ட்டில் மோடி பேச்சு.

நவ. 29- டிச. 1 – அர்ஜென்டினா
‘ஜி-20’ மாநாட்டில் பங்கேற்பு.
2019 ம் ஆண்டு

பிப். 21-22 – தென் கொரியா
வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் ஒப்பந்தம்

ஜூன் 8 – மாலத்தீவு
சுகாதாரம், இரு நாடுகள் இடையே கடல்வழி போக்குவரத்தை அதிகரிக்க ஒப்பந்தம்.

ஜூன் 9 – இலங்கை
அதிபர் சிறிசேனாவை சந்தித்து மோடி பேச்சு.

ஜூன் 14-15 – கிரிகிஸ்தான்
கிரிகிஸ்தானுக்கு ரூ. 20 கோடி கடன் உதவி. இரு நாடுகள் இடையே இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்.

ஜூன் 27-29
‘ஜி- 20’ மாநாட்டில் பங்கேற்பு.

ஆக. 17-18 – பூடான்
ரூபே அட்டையை துவக்கி வைத்தார். கல்வி, விண்வெளி துறைகளில் இணைந்து செயல்படுதல்.

ஆக. 22-23 – பிரான்ஸ்
பாதுகாப்பு, கலாசாரம், பருவநிலை மாறுபாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் ஒப்பந்தம்.

ஆக. 23-24 – ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த விருதான ‘ஆர்டர் ஆப் ஜாயத்’ மோடிக்கு வழங்கப்பட்டது.

ஆக. 24-25 – பஹ்ரைன்
சர்வதேச சூரிய ஒளி மின்சார கூட்டமைப்புடன் ஒப்பந்தம்.

ஆக. 25-26 – பிரான்ஸ்
‘ஜி- 7’ மாநாட்டில் பங்கேற்பு

செப். 4-5 – ரஷ்யா
ஹைட்ரோகார்பன், இயற்கை எரிவாயு ஒப்பந்தம்.

செப். 20-27 – அமெரிக்கா
ஐ.நா., சபையில் மோடி உரை. அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ஹுஸ்டனில் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் பங்கேற்பு.

அக். 29 – சவுதி அரேபியா
விமான போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைகளில் ஒப்பந்தம்.

நவ. 2-4 – தாய்லாந்து
ஆசிய மாநாடு, கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொண்டார்.

நவ. 13-14 – பிரேசில்
‘பிரிக்ஸ்’ மாநாட்டில் பங்கேற்பு.
யார் அதிகம்

பிரதமர் மோடி ஐந்தரை ஆண்டுகளில் 108 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர்களில் மன்மோகன் சிங் பத்து ஆண்டுகளில் 93 பயணங்களும், வாஜ்பாய் 48 பயணங்களும் மேற்கொண்டனர். அதிகபட்சமாக இந்திரா 15 ஆண்டுகால ஆட்சியில் 115 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டார்.
ரூ. 2,021 கோடி

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக 2014 ஜூன் 15 முதல் 2018 நவ., 15 வரை செலவான தொகை ரூ. 2,021 கோடி.
ரூ. 14 லட்சம் கோடி

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் மூலம் 2014 – 2018 காலக்கட்டத்தில் ரூ. 14 லட்சம் கோடி அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு கிடைத்தது. இது 2010 -2014 ஐ விட 43 சதவீதம் அதிகம்

கட்டுரை :- நன்றி தினமலர்

Exit mobile version