அடுத்த 10 வருடமும் மோடிதான் பிரதமர்! பா.ஜ.கவை வீழ்த்த முடியாது! PK புலம்பல்! எதிர்க்கட்சிகள் கதறல்!

BJP

பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் இவரால் தான் தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி கிடைத்தது என்று கூறி வருகிறார்கள். திமுகவினரின் உழைப்பு இல்லை இவரின் மூளைதான் திமுகவின் வெற்றி.என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றார்கள். இவர் தற்போது கோவா மாநில சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூளையாக செயல்பட்டு வருகிறார்.2026-ல் மேற்குவங்க தேர்தலுக்கும் தனது கட்சிக்கு வியூகங்களை வகுத்துக் கொடுக்க பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் மம்தா ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்.

அதேநேரம், மம்தாவுக்கு மிகுந்த விசுவாசமாக நடந்து கொள்ளும் விதமாக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசை வீழ்த்துவதற்காக, 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க படாதபாடுபட்டும் வருகிறார்.

இந்த நிலையில்தான் காங்கிரஸ், ஆம் ஆத்மி சமாஜ்வாடி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட 18 பிரதான எதிர்க்கட்சிகளை ஒன்றாக இணைக்க முற்பட்ட மம்தாவின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதற்கு, இணைப்புப் பாலம் போல செயல்பட்டு வந்த பிரசாந்த் கிஷோரும் நொந்து நூடுல்ஸ் ஆன கதை வேறு.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது,” என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். கோவா அருங்காட்சியகத்தில் நடந்த கலந்துரையாடலில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்று பேசியதாவது:

இந்தியாவில் பாபாரதிய ஜனதா கட்சி இன்னும் 10 ஆண்டுக்கு வலுவான, சக்திமிக்க கட்சியாக இருக்கும். ஆட்சியில் தொடரும் அந்தக் கட்சியுடன் இன்னும் நாம் பல ஆண்டுகளுக்குப் போராட வேண்டியதிருக்கும். பா.ஜ.க அடுத்துவரும் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், தேசிய அரசியலில் அந்தக் கட்சிதான் அரசியல் மையமாக இருக்கும்.

சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்த போதிலும் கூட பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்ததுபோல தெரியவில்லை. எனவே மக்கள் தாங்களாகவே மோடியை தூக்கி எறிந்து விடுவார்கள் என்ற நினைப்பின் வலைக்குள் ராகுல் சிக்கி விடக்கூடாது. ஆனால், பா.ஜ.க எங்கும் போகாது. மக்கள் மோடியைத் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்று ராகுல் நினைக்கிறார். ஆனால், அது நடக்காது. மோடியின் வலிமை என்ன? என்பதை அறிந்து, புரிந்து கொள்ளாதவரை நிச்சயமாக மோடியின் இடத்துக்கு ராகுலால் ஒருபோதும் போட்டியிட முடியாது. அவரைத் தோற்கடிக்கவும் முடியாது.

தேர்தலைப் பொறுத்தவரை நாட்டில் உள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பா.ஜ.கவுக்கு ஓட்டளித்தால் போதும். ஆதரவளித்தால் போதுமானது. மற்ற இரு பங்கு மக்கள் 10 முதல் 15 கட்சிகளுக்குத்தான் பிரித்து வாக்களித்திருப்பார்கள். ஆதலால், மோடிக்கு எதிராகவோ, பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவோ எந்த ஸ்திரமான கூட்டணியும் அணியும் உருவாகாது. 10 முதல் 15 கட்சிகளாகப் பிரிந்து ஓட்டு பிரிவதற்குக் காரணமே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான். என்று குறிப்பிட்டார்.

மேலும் இது குறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில் பிரசாந்த் கிஷோர் கூறுவது அவரின் ஆதங்கத்தையும் பாஜகவினை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இல்லை என்றால் பாஜகவை வீழ்த்த முடியாது என்கிறார் மேலும் ராகுல் காந்தி மாநில கட்சிகளுடன் பேச வேண்டும் இறங்கி வர வேண்டும் என்கிறார். பெட்ரோல் டீசல் விலை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்பதை கூறுகிறார். எது எப்படியோ அடுத்த வரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றி வாகை சூடும் என்பதை பி.கே புரிந்து கொண்டுள்ளார்.

Exit mobile version