கடந்த சிலதினங்களுக்கு முன்னாள் தனது சமூகவலைதள பக்கத்தில் சமுகவலைத்தளங்களில் இருந்து ஓய்வு பெறலாம் என்று நினைக்கின்றேன் என்று பதிவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
சிலத்தினங்களுக்கு மும்பு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நான் எனது சமூகவலைதளத்தை மகளிர்களிடம் மகளிர் தினத்தன்று ஒப்படைக்கப்போகின்றேன் என்று பதிவிட்டிருந்தார் .
இதனை தொடர்ந்து இன்றைய நாள் முழுவதும்7 பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கை பயணம் குறித்த தகவல்களை என்னுடைய சமூக வலைதளம் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். உரையாடுவார்கள்.
இந்தியாவில் பல்வேறு சாதனைகளை செய்த பெண்கள், பல்வேறு இடங்களில், இருக்கிறார்கள். இந்த 7 பெண்களும் பல்வேறு பிரிவுகளில் மிகச்சிறந்த செயல்களை செய்துள்ளார்கள். அவர்களின் வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள், ஆசைகள், லட்சகணக்கான மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் தொடர்ந்து மகளிர் தினத்தை இன்று கொண்டாடுவோம். சாதனை பெண்களிடம் இருந்து அனுபவத்தை கற்று கொள்வோம். இவ்வாறு அந்த பதிவில் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரதமர் மோடி, ” பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் வரும் ஞாயிறுக்கிழமை முதல் வெளியேறலாம் என நினைக்கிறேன் ” என சஸ்பென்ஸ் வைத்தார். இது சமூக வலைளங்களில் விவாதபொருளாக மாறியது. அவர் வெளியேறக்கூடாது என வலியுறுத்தினர்.
இதன் பின்னர், கடந்த செவ்வாய் அன்று, பிரதமர் மோடி, சமூக வலைதள கணக்கை, மக்களை ஈர்த்த 7 பெண்களிடம் ஒப்படைக்க போகிறேன். இவர்களின் அனுபவங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும்” எனக்கூறி சஸ்பென்சை உடைத்தார்.

இதன்படி, இன்று டுவிட்டர் கணக்கை 7 சாதனை பெண்களிடம் மோடி ஒப்படைத்தார்.