மோடியின் மாஸ்டர் மூவ்.. அஜித் தோவல் ரஷ்யா பயணம்.. உலக அளவில் ஏற்படப்போகும் தலைகீழ் மாற்றம்…
கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷ்யா உக்ரைன் போர் தற்போது இந்தியாவின் தலையீடு மூலம் முடிவுக்கு வரஉள்ளது அதற்கான அனைத்து முயற்சிகளையும் பிரதமர் மோடி எடுத்து வருகிறார், இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூலை மாதம் ரஷ்யாவுக்கும் கடந்த மாதம் உக்ரைனுக்கு பயணம் செய்தார்.
அப்போது இருநாட்டு அதிபா்களையும் சந்தித்து பேசிய மோடி அமைதி வழியில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என கூறி இருந்தார்.உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்த ரஷ்ய அதிபர் புதின், இந்தியா, மத்தியஸ்தம் செய்யலாம் என்று புடின் அறிவித்தார். இந்த நிலையில்தான் அஜித் தோவலின் ரஷ்ய பயணம் சர்வதேச அளவில் கவனம் பெறுவதாக அமைந்துள்ளது.
பிரதமர் மோடி உக்ரைன் பயணத்தை நிறைவு செய்துவிட்டு நாடு திரும்பிய பிறகு பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இந்த உரையடலின் போது, அஜித் தோவல் அடுத்த மாதம் மாஸ்கோ வர இருப்பதாகவும் அப்போது அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை செய்வார் என்று மோடி கூறியிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் வரும் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில்.இந்த பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புதினை அஜித் தோவல் சந்தித்து பேசுகிறார். அப்போது ரஷ்யா – உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அமைதிக்கான முயற்சிகள் தொடர்பாகவும் அஜித் தோவல் விவாதிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் தோவலின் இந்த பயணத்தின் போது, பிரிக்ஸ் – தேசிய பாதுகாப்பு ஆலோசர் கூட்டத்திலும் பங்கேற்க உள்ளார். இந்தக் கூட்டத்திற்கு இடையே, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடனும் அஜித் தோவல் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், பேச உள்ளார் ரஷ்யா மற்றும் சீனா நாடுகளின் உயர் அதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சு நடத்துகிறார். இதன் மூலம் ரஷ்யா – உக்ரைன் போரில் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
உலக நாடுகள் இந்த அஜித் தோவல் என்ன பேசப்போகிறார் இந்தியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என குழம்பி போய் உள்ளார்கள். மேலும் இந்த சமாதான முயற்சி வெற்றிபெற்றால் உலகத்தின் வல்லரசாக இந்தியா மாறும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதுமட்டுமில்லாமல் தற்போது மூன்றாம் உலகப்போர் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் வங்கதேசத்தில் கலவரம் ஆப்கானிஸ்தான் ராணுவ ஆட்சி வடகொரியா என்ன செய்கிறது என்ற உலக நாடுகளுக்கு தெரியவில்லை, இங்கிலாந்தில் போர் பதற்றம் கனடாவில் அரசியல் சூழல் மாற்றம் என பல்வேறு சிக்கலில் உள்ளது உலக நாடுகள்.
இந்த நிலையில் இந்தியா ரஷ்ய உக்ரைன் போரை நிறுத்தினால் மூன்றாம் உலகப் போருக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள் சர்வதேச ஆலோசகர்கள். மேலும் இந்தியாவின் முன்னெடுப்பை உலகமே உற்று நோக்குகிறது இந்தியா தனது நிலையிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி செல்கிறது இதற்கெல்லாம் காரணம் பிரதமர் மோடியும் அதன் தளபதிகளான ஜெய்சங்கர் மற்றும் அஜித் தோவால் தான்