மோடி கையிலெடுத்த தரமான பிளான்… வங்கதேசத்தின் கதையை முடிக்கும் நிர்மலா சீதாராமன்! பிப்ரவரியில் இருக்கு கச்சேரி…

Modi Nirmala

Modi Nirmala

இந்தியாவுடன் மோதலை கடைப்பிடித்து வரும் வங்கதேசத்தின் கதையை முடிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அப்படி என்ன திட்டம்? இந்த திட்டம் எப்படி வங்கதேசத்தை பாதிக்கும்? என்பது பற்றிய விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.வங்கதேசம் நம் நாட்டுடன் நேரடி மோதலுக்கு தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. நம் நாடு நினைத்தால் வங்கதேசத்தை எளிதில் முடக்கவிட முடியும். ஆனால் மத்திய அரசு ஒருபோதும் அப்படி நினைக்கவில்லை. இதனால் தான் வங்கதேசம் இன்று வரை தப்பித்து வருகிறது.

ஏனென்றால் வங்கதேசம் என்பது உணவு, உற்பத்தி சார் துறையில் நம் நாட்டை தான் நம்பி உள்ளது. கடந்த 2022-23ம் ஆண்டில் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே 16 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது. குறிப்பாக கூற வேண்டும் என்றால் வங்கதேசம் பருத்தி, அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள், சர்க்கரை, எலக்ட்ரானிக் பொருட்கள், ஸ்டீல் உள்ளிட்டவற்றை நம்மிடம் இருந்து வாங்குகிறது. இருநாடுகள் உறவுகள் பாதிக்கப்படும்போது இந்த பொருட்களின் வினியோகம் பாதிக்கப்படும். ஆனால் நம் நாடு எந்த பொருளையும் ஏற்றுமதி செய்வதை நிறுத்தவில்லை.

சமீபத்தில் கூட மோதலுக்கு நடுவே நம் நாடு 50 லட்சம் டன் அரிசியை வங்கதேசத்துக்கு அனுப்பியது. வங்கதேசத்தில் ரேஷனில் அரிசி வினியோகம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இதனை நம் நாடு செய்தது. ஆனால் அதையெல்லாம் புறம்தள்ளிவிட்டு வங்கதேசம் தொடர்ந்து நம்மை சீண்டி வருகிறது. இந்நிலையில் தான் பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை வைத்து வங்கதேசத்தின் கதையை முடிக்க திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது வங்கதேச நாட்டின் பொருளாதாரம் என்பது ஜவுளித்துறையை நம்பித்தான் உள்ளது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீத பங்கை ஜவுளித்துறை தான் பூர்த்தி செய்கிறது. இதற்கு நம் நாடு தான் உதவி செய்கிறது. அதாவது ஜவுளித்துறைக்கான பருத்தியை நாம் தான் வங்கதேசத்துக்கு அனுப்புகிறோம். நம் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தியில் 35 சதவீதம் வங்கதேசத்துக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பருத்தி ஏற்றுமதியால் தான் வங்கதேசம் ஜவுளித்துறையில் ஜொலிக்கிறது.

இருப்பினும் கூட வங்கதேசத்தில் தற்போது நீடிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இல்லாதது உள்ளிட்டவற்றால் ஜவுளித்துறை பாதிப்பை சந்திக்க தொடங்கி உள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு விரும்புகிறது. அதன்படி பிப்ரவரி மாதம் 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறைக்கு கூடுதல் நிதி, ஊக்கத்தொகை, வரிச்சலுகை உள்ளிட்டவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் ஜவுளித்துறையில் மொத்தம் 45 மில்லியன் மக்கள் (நான்கரை கோடி பேர்) பணி செய்து வருகின்றனர். இதனால் வரும் பட்ஜெட்டில் ஜவுளித்துறை அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2024-25ம் ஆண்டில் ஜவுளித்துறைக்கு 4,417.03 கோடி ஒதுக்கப்பட்டது. வரும் பட்ஜெட்டில் இந்த நிதி ஒதுக்கீட்டை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதேபோல் ஜவுளித்துறையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை்கான(Production linked incentives) நிதி ஒதுக்கீடு தற்போது ரூ.45 கோடியாக உள்ளது. இதனை ரூ.60 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகள் உள்பட அரசின் பிற சலுகைகள் என்பது கிடைக்கும். அதுமட்டுமின்றி பாலிஸ்டர் மற்றுமு் விஸ்கோஸ் ஸ்டேபிள் ஃபைபர் போன்ற மூலப்பொருட்கள் மற்றும் ஜவுளி துறை சார்ந்த இயந்திரங்கள் மீதான வரி குறைப்பது தொடர்பான பரிசீலனையும் மத்திய அரசிடம் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைபர் மீதான இறக்குதி வரி என்பது நம் நாட்டில் 11 சதவீதம் முதல் 27 சதவீதமாக உள்ளது. ஆனால் வங்கதேசத்தில் இது பூஜ்ஜியமாக உள்ளது. இதனால் அந்த வரியையும் குறைப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இதன்மூலம் பிப்ரவரி மாதம் 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் ஜவுளித்துறைக்கு ஜாக்பாட் அடிக்கலாம். மேலும் நம் நாட்டில் ஜவுளித்துறை முன்னேற்றம் அடையும். அதோடு வங்கதேசத்துக்கு பிரச்சனை ஏற்படும். ஏனென்றால் இப்போதே வங்கதேசத்தில் இருந்து ஜவுளியை இறக்குமதி செய்யும் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் நம் நாடு, வியட்நாமை நோக்கி செல்கின்றன.

இதனை சாதகமாக பயன்படுத்த இந்த பட்ஜெட்டில் ஜவுளித்துறைக்கு சில சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டியது அவசியம். அதனை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அதோடு கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை அமெரிக்காவுக்கு வங்கதேசத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடை என்பது 6.7 பில்லியன் அமெரிக்கா டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 0.46 சதவீதம் வரை குறைந்துள்ளது. அதேவேளையில் இந்த காலக்கட்டத்தில் நம்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு 4.4 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 4.25 சதவீதம் அதிகமாகும்.

இதுபற்றி இந்திய ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் பொதுச்செயலாளர் மிதிலேஷ்வர் தாகூர் கூறுகையில், ‛‛வங்கதேசத்தில் உள்ள பிரச்சனையால் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா உள்பட பிற நிறுவனங்கள் மாற்று சப்ளையர்களை தேடுகின்றனர். இந்திய ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன. இதனை பூர்த்தி செய்வதில் சிரமம் உள்ளது” என்றார். இப்படி வங்கதேசத்தில் நிலவும் பிரச்சனையால் நம் நாட்டை நோக்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்களை அரவணைப்பது என்பது நம் நாட்டின் பொருளாதாரத்துக்கும், நம் நாட்டு மக்களுக்கு நல்ல விஷயமாகும். மேலும் ஜவுளித்துறையில் நம்நாடு மார்க்கெட்டை தொடர்ந்து தக்கவைக்கும் பட்சத்தில் வங்கதேசத்தின் ஜவுளித்துறை வரும் நாட்களில் மேலும் பாதிக்கப்படுவதோடு, அந்த நாட்டின் பொருளாதாரம் அடிவாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version