காற்று… கண்ணுக்கு தெரிவதில்லை; ஆனால் அது எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது.உளவு அமைப்புகளும் அப்படித்தான். உளவாளிகள் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எப்படி தகவல் சேகரிக்கிறார்கள்? என்பது பற்றி சாமானிய மக்களுக்கு எதுவும் தெரியாது. காற்றைப்போல் அவர்கள் எங்கும் பரவி இருப்பார்கள்.
இந்த உளவு பார்க்கும் வேலை என்பது மன்னர்கள் காலத்தில் இருந்தே இருக்கிறது. அரசர்கள் ஒற்றர்களை நியமித்து அவர்கள் மூலம், நாட்டில் என்ன நடக்கிறது? மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அரசுக்கு எதிராக யாராவது சதி செய்கிறார்களா? எதிரி நாடு போர் தொடுக்குமா? என்பது பற்றியெல்லாம் மோப்பம் பிடிப்பார்கள். அந்த நடைமுறைதான் காலமாற்றத்துக்கு ஏற்ப இப்போது நவீனமாகி உளவுப்படையாக மாறி இருக்கிறது.
ஒரு நாட்டின் பாதுகாப்பில் உளவுப்படையினருக்கு முக்கிய பங்கு உள்ளது. இயக்கங்கள், அமைப்புகளின் செயல்பாடுகள், அவற்றுக்குள்ள தொடர்புகள், அரசுக்கு எதிராக நடைபெறும் சதி, போராட்டங்கள் போன்றவை தொடர்பான புலனாய்வு தகவல்களை ரகசியமாக சேகரித்து மேல் நடவடிக்கைகளுக்காக அரசுக்கு வழங்குவதுதான் உளவுப்படையின் முக்கிய பணி.
எல்லா நாடுகளும் உளவுப்படையை வைத்துள்ளன. நம் நாட்டில் ‘ரா’ உளவுப்படை இருப்பதை போன்று அமெரிக்காவில் எப்.பி.ஐ., சி.ஐ.ஏ. உள்ளது. ரஷியாவில் கே.ஜி.பி. என்ற அமைப்பும், பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. உளவுப்படையும் செயல்படுகின்றன. அந்த வகையில், மேற்கு ஆசியாவில் உள்ள குட்டி நாடான இஸ்ரேலின் ‘மொசாத்’ (‘புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் நிறுவனம்’) உளவுப்படை மிகவும் திறமைவாய்ந்ததாகவும், சாதுர்யம் மிக்கதாகவும் கருதப்படுகிறது
புலனாய்வு தகவல்களை சேகரிப்பது, எதிரிகளுக்கு எதிராக ரகசிய நடவடிக்கைகள் எடுப்பது, இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை ஒடுக்குவது ஆகியவை இதன் முக்கிய பணிகள் ஆகும். மொசாத்தின் இயக்குனர் நாட்டின் பிரதமருக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவர். வேறு யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது. டேவிட் பர்னியா என்பவர் தற்போது இதன் இயக்குனராக உள்ளார். எதிரிகளை ஒடுக்க வியூகங்களை வகுப்பதில் கில்லாடியான மொசாத்தின் கணிப்புகளும், உளவுத்தகவல்களும் சரியாகவே இருக்கும் என்பதை கடந்த காலத்தில் நடந்த பல சம்பவங்கள் நிரூபித்து இருக்கின்றன.
வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரானுக்கு வடகிழக்கே வெடிச்சத்தம் கேட்டதாக ஈரான் அரசு செய்தி நிறுவனமான நூர் நியூஸ் உறுதிப்படுத்தியது. இஸ்ரேல் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தத் தாக்குதல்கள் 10க்கும் மேற்பட்ட அணு மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்டதாகவும், ஈரான் சில நாட்களில் 15 அணு குண்டுகளை உருவாக்கும் அளவுக்குப் போதுமான பொருட்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது ஈரானிடம் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது. முன்பு 200 கிலோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இருந்த ஒப்பந்தம் நீக்கப்பட்ட நிலையில் அணு ஆயுதம் செய்ய தயாரான தரத்தில் இருக்கும் உயர் ரக யுரேனியம் 5.5 டன் வரை உள்ளது.ஈரான் இப்போது யுரேனியத்தை 60-70 சதவிகிதம் தூய்மைக்கு செறிவூட்டுகிறது, மேலும் செறிவூட்டப்பட்டால், அது அணு ஆயுதம் தயாரிக்க ஏதுவாகும். விரைவில் இதனால் ஈரான் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளவும் முடியும். அவசரமாக தேவைப்பட்டால் உடனே அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கவும் முடியும்.
இதைத்தான் இஸ்ரேல் தாக்க முயற்சி செய்கிறது. நேற்று இதில்தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஈரானின் அணு உலை மற்றும் அணு ஆராய்ச்சி மையங்களை இஸ்ரேல் தாக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்கான சீக்ரெட் திட்டங்களை இஸ்ரேலின் மொசாத் அமைப்பு மேற்கொண்டதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கணித்து உள்ளனர். ஈரான் உள்ளே அவர்களின் அணு திட்டங்களை சேதப்படுத்தும், தோல்வி அடைய செய்யும் பணிகளை இஸ்ரேல் தனது உளவாளிகள் மூலம் செய்ததாகவும்.. நேற்று மொசாத் உதவியுடன் இந்த தாக்குதல்களை செய்ததாகவும் கூறப்படுகிறது.
பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாங்கள் படையெடுப்போம் என்று துருக்கி அதிபா் எா்டோகன் எச்சரித்திருந்தார். ஈரானை முடித்துவிட்டு அடுத்த டார்கெட் துருக்கியாம். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் இஸ்ரேல் புது அத்தியாயத்தை உருவாக்கி வருகிறது. இஸ்ரேலுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் பல நாடுகள் பின்வாங்க தொடங்கி உள்ளது.