ஆசிரியரை மிரட்டும் அரசு பள்ளி மாணவர்கள்! வாய் மூடி நிற்கும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர் அமைப்பு

சில நாட்களாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் வகுப்புகளில் செய்யும் அட்டகாசங்கள் எல்லையை மீறி செல்கின்றன. இதைப் பார்த்துக் கொண்டு இருக்கும் ஜாக்டோ ஜியோ ஆசிரியர் அமைப்பு வாய் மூடியபடி இருக்கிறது.

திமுகஆட்சிக்கு வந்தவுடன்ஆசிரியர்களுக்கு எதிராக மாணவர்கள் செய்யும் அராஜகங்களை ஒரு அமைப்பாவது கண்டனம் தெரிவிக்க முன்வரவில்லை ஏன்? புனிதமான பணி ஆசிரியர் பணி. அவர்களுக்கு எதிராக மாணவர்கள் செய்யும் அராஜகம் பொதுஜன சமூகமும் கண்டிக்க முன்வர வேண்டும். தி.மு.க ஆட்சிக்கு எதிராக பேசிட கூடாது என்று இருக்கும் ஆசிரியர்களை பார்த்து வியப்பு தான் ஏற்படுகிறது.எப்படி புரிய வைப்பதுகையறு நிலையில் ஆசிரியர்கள்!

தமிழக கல்வி துறை ஆசிரியர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.ஆசிரியர்களுக்குப் பயந்து மாணவர்கள் படிக்கத் தொடங்கியதும், பட்டம் வாங்கி பார்புகழ உயர்ந்ததெல்லாம் கடந்த கால வரலாறு. இன்று திராவிட ஆட்சியில்மாணவர்களுக்குப் பயந்து ஆசிரியர்கள் தங்களது கற்பித்தலை நிகழ்த்த வேண்டிய நிலைக்கு மாற்றியிருக்கிறது கல்விமுறைஅல்லது கற்றல் முறை.

திடீரென திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களை கொலை செய்திடுவேன் கையை வெட்டி விடுவேன் என்று மிரட்டும் காணொளிகளும்மாணவ, மாணவிகள் சேர்ந்து மது குடிக்கும் காணொளிகளும் ,பீடி, சிகரெட்டை மாணவிகள் ஊதி தள்ளும் காணொளிகளும் அதிகமாக காண முடிகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில்12 ம் வகுப்பு முடித்துவெளியேறும்பல லட்சம் மாணவர்களில் மருத்துவ மாணவர்களை இன்னும் ஏன்சல்லடை போட்டுத் தேட வேண்டியிருக்கிறது? காரணம் என்ன? தரமான பாடத்திட்டம்,தரமான கல்வி இருந்தும்தகுதித் தேர்வுகளுக்கோ நுழைவுத்தேர்வுகளுக்கோ தனியே Coaching centres ஐ தேடிக்கொண்டிருக்கின்றோமே ஏன்? காரணம் All pass

இதுவரைதமிழகப் பள்ளிகளில்நடக்காத சம்பவங்கள்,அரங்கேறாத வன்முறைகள் இப்பொழுது மட்டும் எப்படி? உங்களது கற்றல் சீர்திருத்தைஆசிரியர்களின் கற்பித்தல் சுதந்திரத்தின்மீது கைவிலங்கிட்டு கல்வியைச் சிறையிலடைத்து விடாதீர்கள்.

ஆசிரியர் அமைப்புகளே கொஞ்சம் வாய் திறப்பீர்களா? மேலும் வேலூர் அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறை மேஜையை அடித்து நொறுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தாய், தந்தைக்கு அடுத்து, தெய்வத்திற்கு ஒரு படி மேலே வைத்து பார்க்கப்படும் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சம்வபம் பொதுமக்கள் மத்தியில்  மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது. தங்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யப் போகும் பள்ளிக்கு, பாடம் பயிலச் செல்லும் மாணவர்கள் சமூக விரோதிகள் போல செயல்படுவதும், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் தரம் தாழ்ந்து தாக்க முற்படுவதும் அடுத்த தலைமுறை மிகப் பெரிய ஆபத்தை நோக்கி செல்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

Exit mobile version