நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் ,பஞ்சாப் தவிர நான்கு மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் மிகுந்த வரவற்பு பெற்றுள்ளதாக இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளன. பா.ஜ., காங்.. சமாஜ்வாதி கட்சி,கள் பிரசார நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் இந்தியா டுடே -கர்வி இணைந்து ‛‛மூட் ஆப் தி நேசன்’ என்ற தலைப்பில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்கள் மற்றும், நாடு முழுவதும் லோக்சபா தொகுதிகளில் பிரதமர் மோடி ஆட்சியின் செயல்பாடுகள், கொரோனா பரவலை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், மெகா தடுப்பூசி இயக்கம், பல்வேறு திட்டங்கள், குறித்து கருத்து கணிப்பு நடத்தியது.
கருத்து கணிப்புகள் வாயிலாக உ.பி. 75 % பேரும், உத்தரகாண்ட், 59 % , கோவா 67 % , பேர் மணிப்பூர் 73 % , பஞ்சாப் 37 % பேர் பிரதமர் மோடியின் செயல்பாடு நன்றாக இருப்பதாகவும், 13 % பேர் சராசரியாக இருப்பதாகவும் 20 % பேர் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
296 தொகுதிகளில் வெற்றி
2024-ம் ஆண்டு பார்லி. லோக்சபாவுக்கு தேர்தல் நடக்கிறது. பார்லி. லோக்சபாவிற்கு இன்றே தேர்தல் நடந்தால் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 296 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாகவும், பா.ஜ., 271 இடங்கள் பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், ‛‛மூட் ஆப் தி நேசன்’ வெளியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
ஜீ நியூஸ்
ஜீ நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பு வாயிலாக, ,நடக்கவுள்ள உத்தரப்பிரதேச தேர்தலில் பா.ஜ., மீண்டும் வெற்றி பெறும்,யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வர் ஆவார் என கருத்து கணிப்பு முடிவு தெரிவிக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 72% பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
தகவல் தினமலர் .