நேற்றைய சட்டசபை கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி அவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அலுவலகங்களில் இந்துக்கள் மட்டுமே பணிநியமனம் செய்ய வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்புவதோடு, அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்.
திருக்கோயில்களில் உள்ள ஆபரணங்களை கணக்கெடுத்து அதன் மதிப்பீடுகளை தெரியப்படுத்த வேண்டும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை வரவேற்கிறோம். இதற்கான பயிற்சிகளை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்கனவே கொடுத்து வருகிறது.
நாகர்கோவில் தொகுதிக்குட்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஏற்பட்ட விபத்து போல, இனி எந்த கோயிலிலும் விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலில் சேதமடைந்த பகுதிகள் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.