தோனியின் சூட்சமம் என்னை வியக்க வைத்தது கம்பீர் புகழாரம்.

தோனியின் சூட்சமம் என்னை வியக்க வைத்தது தோனிக்கு கம்பீர் புகழாரம்.

ஐபிஎல் 2021, போட்டிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதிலும் சென்னை அணி பழைய சென்னை அணியாக கர்ஜித்து வருகிறது. 11 வீரர்களும் அடித்து ஆட கூடியவர்கள். அதனால் சென்னை முதல் போட்டியை தவிர மற்ற 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் 15வது போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக களம் கண்டது சென்னை அணி. நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணியினர் வானவேடிக்கை காட்டினார்கள் .

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடினர். ருத்துராஜ் 42 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 12 பந்தில் 25 ரன்களும், டோனி 8 பந்தில் 17 ரன்களும் விளாசினர்.

டு பிளிஸ்சிஸ் 60 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 95 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்துள்ளது.

220 ரன்களை விரட்டிய கொல்கத்தா அணி 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. இதன் பின் தினேஷ் கார்த்திக், ரஸல், பாட் கமின்ஸின் அதிரடி ஆட்டங்களினால் ஆட்டம் கொல்கத்தா பக்கம் சென்றது.
ஒன்றுமேயில்லாமல் போன ஆட்டத்தை கார்த்திக், ரஸல், கமின்ஸ் திருப்பினர். சாம் கரனின் ஒரே ஒவரில் 30 ரன்கள் விளாசப்பட்டது, ஆனால் கடைசியில் சாம் கரன் ஆந்த்ரே ரசலை பவுல்டு செய்து வெற்றி கண்டார். ரஸல் 21 பந்துகளில் அதிரடி அரைசதம் கண்டு வெளியேறினார். இது திருப்பு முனை விக்கெட்.

அதாவது ஷர்துல் தாக்கூர் வைடு ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை வீசி ரஸலின் மனநிலையை அதற்கு செட் செய்தார். முழுதும் ஆஃப் சைடில் பீல்டிங் நெருக்கப்பட்டது, இதனால் சாம் கரன் வைடு ஆஃப் ஸ்டம்பில்தான் வீசுவார் என்று முன் கூட்டியே தீர்மானித்த ரஸல் ஆஃப் திசையில் ஒதுங்கி சாம் கரன் பந்தை ஆட முயன்றார். ஆனால் பந்து லெக் ஸ்டம்புக்கு நேராக வந்ததை தவறாக அவர் வைடு என நினைத்து ஆடாமல் விட்டார் பவுல்டு ஆனார். இதனை அருமையான கண்கட்டு வித்தை என்று கம்பீர் கூறுகிறார்.

கம்பீர் இது தொடர்பாக கூறியதாவது:

என்னைப் பொறுத்தவரை ரஸல் பவுல்டு ஆக்கப்பட்ட விதம் ஒரு கண்கட்டு வித்தை. மிகப்பிரமாதமான ஐடியா அது. ஏனெனில் ஒட்டுமொத்த களவியூகமும் சாம் கரன் அந்தப் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போடப்போகிறார் என்ற தோற்றத்தையே ஏற்படுத்தியது. ரஸலும் அதற்கு தயாராக இருந்தார்,

ஷர்துல் தாக்கூர் முதல் ஓவரை முழுதும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக வீசியிருந்தார். இந்நிலையில் சாம் கரன் லெக் ஸ்டம்பை நோக்கி வீசியது ரஸல் எதிர்பாராதது, அதனால் அது லெக் ஸ்டம்ப் வைடு என்று ரஸல் ஆடாமல் விட முடிவெடுத்து பவுல்டு ஆனார்.

ரஸல் பந்தை அடித்து ஆடிய விதம் நிச்சயம் இன்னும் 4-5 ஓவர்கள் ஆடியிருந்தால் வெற்றி நிச்சயம் என்று அவர் அடியாழ மனதில் தோன்றியிருக்கும். தான் கிரீசில் இருக்கும் வரை ஆஃப் ஸ்பின்னருக்கு ஓவர் தரமாட்டார் தோனி என்பது ரஸலுக்குத் தெரிந்திருக்கும்.

ஏற்கெனவே ஒரு ஓவரில் 24 ரன்கள் விளாசினார் ரஸல். ஆட்டமிழந்து செல்லும் போது தான் சதம் அடிக்கும் பொன்னான வாய்ப்பையும் அணியை வெற்றி பெறச் செய்யும் வாய்ப்பையும் இழந்ததாக அவர் நிச்சயம் கருதுவார்.

இத்தகைய வாய்ப்புகள் அதிகம் வாய்க்காது. ஏனெனில் வான்கடேயில் அடிக்கடி ஆடும் வாய்ப்பு கிட்டாது. வெளுத்து வாங்கினார், நிச்சயம் ரஸல் வேதனையே படுவார். சாம் கரனின் அந்தப் பந்தை அவர் தடுத்தாடியிருந்தால் கொல்கத்தா நிச்சயம் வென்றிருக்கும்.

இவ்வாறு கூறினார் கம்பீர்

Exit mobile version