மூங்கில்துறைபட்டியில் அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் துண்டு பிரச்சுரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்ட நிர்வாகிகள்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி, மூங்கில்துறைபட்டு பகுதியில்,அஇஅதிமுக அம்மா பேரவை சார்பில் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு செய்த நலத்திட்ட பணிகள் குறித்தும் வளர்ச்சிப் பணிகள் குறித்த சாதனைகள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இரா.குமரகுரு ஆலோசனையின்படி,கள்ளகுறிச்சி மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் ஞானவேல், தலைமையில், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் திருமால் வரவேற்புரை ஆற்றினார், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அரசு.இளந்தேவன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜாராம்,கதிர் தண்டபாணி, துரைராஜ், அருணகிரி, பழனி எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மூங்கில்துறைப்பட்டு பஸ் நிறுத்தம்,கடைவீதி உட்பட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு ஊர்வலமாகச் சென்று கடந்த கால அதிமுக அரசின் சாதனைகள் விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள், பயணிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

Exit mobile version