மதுரை துணை மேயர் மீது கொலை முயற்சி… திமுகவின் வெறிச்செயல்… சீட்டுக்காக மௌனத்தில் கம்யூனிஸ்ட்…

madurai-corporation-deputy-mayor

madurai-corporation-deputy-mayor

போதை மாத்திரைகள் குறித்து புகார் அளித்ததால் கொலை செய்ய முயற்சித்ததாக மாநகராட்சி இந்திய கம்யூனிஸ்ட் துணை மேயர் கூறியுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை கிளப்பியுள்ளது. மதுரை மாநகராட்சியின் துணை மேயரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகராஜன் வீடு, அலுவலகம் மீது ஆயுதங்களோடு வந்து 2 பேர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மதுரை மாநகராட்சி திமுக வசம் உள்ளது. திமுகவின் இந்திராணி மேயராக உள்ளார். துணை மேயர் பதவி என்பது திமுகவின் கூட்டணி கட்சியாகன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலரான நாகராஜன் துணை மேயராக செயல்பட்டு வருகிறார்.

இவர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் துணை மேயர் நாகராஜன் தனது குடும்பத்துடன் இந்த வேளையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் அவர்களின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டனர்..

இந்நிலையில், துணை மேயர் நாகராஜனின் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு வீட்டிற்கு உள்ளே நுழைந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து துணை மேயரின் அலுவலக முன்பக்க கண்ணாடிகள் முற்றிலுமாக அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக துணை மேயர் நாகராஜன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார். அப்போது.. ”ஜெயந்திபுரத்தில் சர்வ சாதாரணமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இளைஞர்களுக்கு எளிதாக கிடைக்கிறது. இதுகுறித்து காவல் துறையிடமும், மாமன்ற கூட்டத்திலும் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அரசியல் பின்புலம் உள்ளது என்ற காரணத்தைச் சொல்லி ஏமாற்றி இளைஞர்களை கூலிப்படைனராக மாற்றி வருகிறார்கள்.

இந்த பகுதியை சேர்ந்த திமுக வட்டச் செயலாளர் கண்ணன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக தன் மீது அவதூறு பரப்பி வருவகின்றனர். இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர், திமுக மாவட்டச் செயலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் தலைமையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களின் தூண்டுதலின் பேரிலேயே என்னை கொலை செய்ய முயன்றனர்” என்று குற்றம்சாட்டினார்

எனது வீட்டில் இருந்து காவல் நிலையம் சிலர் தூர மீட்டர் தொலைவில் இருந்தும். நான் தாக்கப்பட்டது குறித்து காவல்துறையின் 100க்கு தொடர்பு கொண்டபோது தொடர்பு கிடைக்கவில்லை. காவல் நிலையத்தில் புகார் அளித்து பிறகு அரைமணி நேரம் கழித்துதான் சம்பவ இடத்திற்கு வந்தார்கள், காவல் ஆய்வாளரிடம் சொன்னதற்கு மீட்டிங்கில் இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், துணை மேயர் வீட்டு வாசலில் ரகளையில் ஈடுபட்ட இருவரை கைது செய்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version