களவாணி திரைப்படம் டைரக் டர் சற்குணம் அவர்களின் முதல் படம் .தஞ்சை மாவட்டத்தின் வாழ்வியலை மிக அழகாகவும் இயல்பாகவும் கொடுத்து இருப்பார் அந்த படத்தை நினைத்துக்கொண்டு சற்குணத்தின் அடுத்த படமான வாகை சூடவாவை பார்க்கும் பொழுது சற்குணம் படைப்பாளி அவதாரம் எடுப்பதற்காக அந்த படத்தை எடுத்து இருந்ததால் படம் பார்க்கும் பொழுதே தூக்கம் வந்து விட்டது.
இருந்தாலும் இந்த படத்தில் வரும் பாடல்களை கேட்டவுடன் கண் திறந்து படத்தை பார்க்க முயல்வதும் பாட்டு முடிந்ததும்தூக்கம் வருவதும் என்று வாகை சூடவாவில் தியேட்டரில் பலரின் தூக்கத்தை கெடுத்தவர் ஜிப்ரான்.அலட்டல் இல்லாத அற்புதமான இசை அமைப்பாளர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்.தந்தை இந்துவாக இருந்தும் இவர் இஸ்லாம் மதத்திற்கு சென்று விட்டார்.அவருடைய சமீபத்திய பேட்டி ஒ ன்றில் அவர் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்பி விட்டதாக சந்தோசத்துடன் கூறியுள்ளார். கோவையில் பிறந்து சென்னையில் வாழ்ந்து சிங்கப்பூரில் சில வருடங்கள் இருந்த வாழ்க்கை பயணத்தில் ஜிப்ரானுக்கு ஏதோ ஒரு விசயத்தில் மத மாற்றம் தேவைப்பட்டு இருக்கும்.
ஆனால் இசை அமைப்பாளராக அவர் வாழ்ந்து வரும் வாழ்க்கையில் இசைக்கும் இந்து மதத்திற்கும் உள்ள பிணைப்பை தினமும் உணர்ந்து இருப்பார்.அந்த உணர்வு தான் அவரை குரங்கு பெடல் படத்திற்கு இசை அமைக்கும் பொழுது அதில் வருகின்ற 1980 ம் ஆண்டுகளில் நாம் வாழ்ந்த சுதந்திரமான சிறு வயது வாழ்க்கையை நினைக்க வைத்து அவரை தாய் மதம் திரும்ப வைத்துள்ளது. இந்து மதத்திற்கு திரும்பிய முகம்மது ஜிப்ரான் இப்பொழுது த ன்னுடைய பெயரை ஜிப்ரான்வைபோதா என்று மாற்றி இருக்கிறார். வைபோதா என்றால் என்ன தெரியுமா? விழித்தெழுதல் என்று அர்த்தமாகும்.
இது குறித்து ஆறி கூறுகையில் சிலகாலம் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வந்த நான், கடந்த 4 ஆண்டுகளாக மீண்டும் ஹிந்துவாகி விட்டேன். சட்டபூர்வமாகவும் அனைத்து மாற்றங்களையும் செய்து விட்டேன். அதன் காரணமாக ஜிப்ரான் என்ற எனது பெயருடன் எனது தந்தையின் பெயரையும் இணைத்து குரங்கு பெடல் படத்தில் ஜிப்ரான் வைபோதா என டைட்டில் கார்டில் என் பெயரை போட்டேன். மீண்டும் ஹிந்துவாகி விட்டதால் இனி நான் இசையமைக்கும் அனைத்து படங்களிலும் ஜிப்ரான் வைபோதா என்றே எனது பெயர் இடம்பெறும்,” என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் ஜிப்ரான். இனி வருகின்ற காலங்களில் விழித்தெழுவார்கள் என்பது நிச்சயம்.