திமுக பொங்கல் விழாவில் இசைவாணி…. ஓடவிட்ட ஹிந்து அமைப்பினர்… ஷாக்கான திடல் குரூப்ஸ்..

isaivani

isaivani

‘ஐம் சாரி ஐயப்பா, உள்ளே வந்தா தப்பாப்பா’ என ஐயப்ப பக்தர்களை சீண்டும் விதமாக பாடகி இசைவாணி பாடியிருக்கும் பாடலுக்கு ஐயப்ப பக்தர்களை கொந்தளிக்க செய்தது. கானா பாடகியாகதன்னை காட்டி கொண்டு இந்துக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருபவர்களில் ஒருவர் இசைவாணி. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக முன்பு நுழைந்தார். இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒவ்வொரு வருடம் டிசம்பர் மாதத்திலும் மார்கழியில் மக்களிசை என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் இசைவாணி ஐயப்ப பக்தர்களை சீண்டும் விதமாக, ‘ஐம் சாரி ஐயப்பா, உள்ளே வந்தா தப்பாப்பா’ என்ற பாடலை பாடியிருப்பார்.

இது ஐயப்பனையும் அவரை வணங்கும் பக்தர்களையும் இழிவுபடுத்துகின்ற வகையில் பாடல் பாடினார் இது தமிழக மக்களை மட்டுமல்லாமல் கேரளா மக்களிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் பாடகி இசைவாணி மீதும் பா.ரஞ்சித் மீதும் தமிழகம் மற்றும் கேரளாவில் புகார்கள் கொடுக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் இசைவாணியை பெரிய ஹீரோயினாக காட்ட ஒரு குழு தயாரானது. கேரளாவில் இசைவாணியை வைத்து நிகழ்ச்சியை நடத்தவும் சபரிமலை கோவிலுக்கு செல்லவும் திட்டமிட்டதாக தற்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது இதனை தொடர்ந்து .இந்த தகவல் கேரள மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் கோவத்தையும் கிளப்பியுள்ளது. இசைவாணி இங்கேவரட்டும் கேரளா எல்லையை தொடட்டும் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என கொந்தளித்தார்கள் கேரள மக்கள் மற்றும் ஐயப்ப பக்த்ர்கள். இதனை தொடர்ந்து இசைவாணியின் திட்டம் கைவிடப்பட்டதாக செய்திகள் வந்தது.

இசைவாணிக்கு ஆதரவாக திருமா,பா ரஞ்சித் பேசி கொம்புசீவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.இந்த நிலையில் இசைவாணிக்கு எதிராக பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் குரல் எழுப்பினார். இசைவாணியின் பாடலை விமர்சனம் செய்தார். இது குறித்து ஐயாம் சாரி ஐயப்பா’ பாடல் கேட்டேன்! சுவாமி ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்டு பாடத் தொடங்கிய விதம் அருமை, நல்ல குரல் வளம். ஆடிக்கொண்டே பாடிய ஸ்டைல் அற்புதம்! ஒரே ஒரு குறை! பாடல் தெளிவாக கேட்காத அளவுக்கு வாத்தியங்களின் ஓசை அதிகம்.இதைப்போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு விஷு, மகரஜோதி போன்ற விசேஷ நேரங்களில் பாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும்! இவர்களுக்கும் ‘பூசை’ சிறப்பாக நடக்கும்! ஐயன் ஐயப்பன் இதை ‘நிந்தா ஸ்துதி’யாக ஏற்றுக்கொள்வார் அவர் வாகனமாகிய புலி ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை! ‘ஐயாம் சாரி ஐயப்பா. அறிவு புகட்டி அனுப்பப்பா,” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் திருச்சி மாநகரம், 57வது வட்ட தி.மு.க., சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவை ஒட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சென்னையை சேர்ந்த கானா பாடகி இசைவாணி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சுவாமி அய்யப்பன் குறித்து சர்ச்சையான பாடல்கள் பாடிய இசைவாணியின் நிகழ்ச்சி, ஹிந்து அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.பா.ஜ.க மற்றும் ஹிந்து அமைப்புகள் நிகழ்ச்சியை ரத்து செய்ய வலியுறுத்தி, போலீசில் புகார் அளித்திருந்தன. இதையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன், போலீசார் பேச்சு நடத்தினர். முடிவில், இசைவாணியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.ஐயப்பனுக்கு எதிராக திமுக தான் பின்னணியில் இருந்து செயல்பட்டு வருகிறது என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

Exit mobile version