நேற்றைய தினம் தமிழக பா.ஜ.கவின் மாநில தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார் முன்னாள் ஐ பி எஸ் அதிகாரி அண்ணாமலை அவர்கள். அவரின் பதவி ஏற்பு விழா கோலாகலமாக பாஜகவால்ன் கொண்டாடப்பட்டது. பா.ஜ.க தலைமை அலுவலகம் திருவிழா கோலம் பூண்டது. ஆயிரக்கணகக்கான பாஜகவினர் சென்னையை நோக்கி படையெடுத்தார்கள். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன்,ஹெச். ராஜா,சிபி ராதாகிருஷ்ணன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் மாநில நிர்வாகிகள் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
பா.ஜ.க மாநில தலைவராக பதவியேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அவர்கள் அனல் தெறிக்கவிட்டார் என்ற சொல்லலாம். தி.மு.க விற்கு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். அவரின் பேச்சில் அனல் பறந்தது. மேலும் அவர் பேசுகையில் பா.ஜ.க வில், நான் 2020 ஆகஸ்ட் 25ல் இணைந்தேன். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான், படித்து கல்வி பெற்று, இந்திய காவல் துறையில் 9 வருடங்களாக பணியாற்றினேன். பிரதமர் நரேந்திர மோடியின் மீது ஏற்பட்ட பற்றால், தேச பக்தியால், தனது ஐ.பி.எஸ் பணியை துறந்து அரசியலில் ஈடுபட்டேன்.இது தான் நேரம் என்று எனக்கு தோன்றியது.
கடந்த 10 மாதங்களாக, தமிழக பா.ஜ.கவின் துணைத் தலைவராக நான் இருந்து வந்துள்ளேன். தற்போது, எனக்கு தலைவர் என்ற புதிய பொறுப்பை கொடுத்துள்ளனர்;இதை மகிழ்ச்சியுடன், ஆனந்தத்துடன், பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். எங்களின் கட்சி மிகவும் வித்தியாசமானது. எனக்கு அனுபவம் குறைவாக இருக்கலாம். இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியதை, மிகவும் நன்றாக பயன்படுத்த வேண்டும். இந்த கட்சியை, பல தலைவர்கள் உயிரை கொடுத்து வளர்த்து உள்ளனர்.
பா.ஜ.கவை தமிழகத்தில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். குற்றம் சொல்லியே அரசியல் செய்த தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 70 நாட்களாகியும், தேர்தல் அறிக்கையை முழுதுமாக செயல்படுத்தவில்லை.’நீட்’ தேர்வுக்கு முன் சராசரியாக, 19 கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்விக்கு சென்றனர். ஆனால், நீட் தேர்வு வந்த பின், 430 கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு சென்றுள்ளனர். இது தான் உண்மையான சமூக நீதி.சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு, நீட் தேர்வு வரப்பிரசாதமாக உள்ளது. நீட் சாதகங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்போம்.
அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்பது, பிரதமரின் கனவாக உள்ளது. மத்திய அரசு, 14 ஆயிரம் கோடிக்கு, 90 கோடி ‘டோஸ்’கள், ‘ஆர்டர்’ கொடுத்துள்ளது. தமிழகத்திற்கு சரியாக தடுப்பூசி கொடுக்கவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை, தி.மு.க.முன்வைத்து அரசியல் செய்து வருகிறது.தவறுகள் நடக்கும் போது தட்டி கேட்கக் கூடிய ஊடகங்கள் தமிழகத்தில் உள்ளன. என்னை பொறுத்தவரை, தலைவர் என்ற பதவியை பொறுப்பாக பார்க்காமல், சேவகனாக பார்க்கிறேன். எனக்கு வயது குறைவாக இருந்தாலும், எந்த முடிவுகளாக இருந்தாலும், தலைவர்களுடன் ஆலோசித்து, குடும்பமாக முடிவு எடுப்போம்.
என் அட்ரஸ் கோபாலபுரம் இல்லை அந்த ஆண்டவன் கொடுத்த அட்ரஸ் தொட்டம்பட்டி! அதற்காக நான் ஆண்டவனுக்கு நன்றி கூறுகிறேன் அந்த வழியில் தான் நான் பயணிப்பேன் என கூறினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள்!