தேசிய அரசியலில் வானதி சீனிவாசன்! பாஜக தேசிய மகளிரணி தலைவராக நியமனம்!

பா.ஜ.க வில் மாநிலத் துணைத்தலைவராக இருக்கும் திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் தமிழகத்தில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். கோவையில் மக்களோடு மக்களாக கலந்து அவர்களிடம் பேசி பழகி அவர்களின் குறைகளையும் கேட்டு அதற்கான நிவர்த்தி செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்கோவையில் 5 நாட்கள் தாகம் தீர்க்கும் தாமரை யாத்திரை நடத்தி பல குளங்களை தூர்வாரினார் இது கோவையில் பெரிதும் பேசப்பட்டது. இதன்பின் தமிழகமெங்கும் குளங்கள் தூர் வரப்பட்டனர் தமிழக அரசின் முயற்சியால் இதற்கு இவரின் வானதி சீனிவாசனின் தாகம் தாமரை யாத்திரை தான் காரணம்.

மேலும் இவர் உப்பிலிபாளையம் எனும் கிராமத்தைத் தத்தெடுத்து நூலகம் முதல் குளங்கள் வரை அனைத்தையும் பராமரித்து வருகிறார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் கோவை மக்கள் சேவை மையம் மூலம் மக்களுக்கு பிரதமர் மோடியின் திட்டங்களை நேரடியாக சென்று சேர்க்கிறார் பூக்கடை முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை இவரின் சேவை பாராட்டைப் பெற்றுள்ளது.

இவர் சிறு வயதிலிருந்தே ஏபிவிபியில் தன்னை அர்ப்பணித்து மக்களுக்கு சேவை செய்து வந்தார். அதன் பின் சிறு சிறு பொறுப்புகளாக முன்னேறி தற்போது பாஜக தேசிய மகளிரணி தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version