நீட் தேர்வு வருவகற்கு முன்னர் மருத்துவ நுழைவு தேர்வு என்கிற பெயரில் மாநிலங்கள் அல்லது கல்லூரிகளால் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்தது. இதில் பல மோசடிகள் நடந்தது. ஏழை மாணவர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை, இதனை தொடர்ந்து மத்திய அரசால் நாடு முழுவதும் ஒரே நுழைவு தேர்வு என நீட் கொண்டு வந்துது. இது ஏழை மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைத்தால் ஆண்டுக் கட்டணம் ரூ. 13,600 மட்டுமே. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்தால் ரூ. 11,600 மட்டுமே. நீட் தேர்வு முறையில் அரசு கோட்டாவின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். கிடைத்தால், ஆண்டுக்கு ரூ. 4 லட்சம் வரை கட்ட வேண்டும். தனியார் பல் மருத்துவமனையென்றால், ரூ. 2 லட்சம்.
நீட் தேர்வு மூலம் நிர்வாக கோட்டாவின் கீழ் (Management quota) எம்.பி.பி.எஸ். கிடைத்தால் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும். ஆனால் நீட் தேர்வு வருவதற்கு முன்னர் தனியார் கல்லூரிகளில் கோடிகளில் புரண்ட மருத்துவ சீட் தற்போது எளிமையாக கிடைக்க நீட் வழிவகை செய்துள்ளது. இதன் காரணமாகவே தமிழகத்தில் நீட் வேண்டாம் என கூறிவருகிறார்கள்
இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத, அரசு பள்ளி மாணவர்கள், 46,216 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.அதேபோல், ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்தாண்டு நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர, அரசு பள்ளி மாணவர்கள், 46,216 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.இவர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வி துறையின் சார்பில், நீட் இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜே.இ.இ., தேர்வு பயிற்சிக்கு, 29,279 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நீட் மற்றும் ஜே.இ.இ., ஆகிய, 2 தேர்வுகளையும் எழுத, 31,730 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள், 46,000த்துக்கும் மேற்பட்டோர், நீட் தேர்வு எழுத ஆர்வம் தெரிவித்து, அரசின் இலவச பயிற்சியில் சேர்ந்துள்ளனர்.
ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, ஆளும் தி.மு.க., சார்பில், கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு ஆர்வம் காட்டி வருவது முட்டையை தூக்கி காட்டிய உதயநிதிக்கு பெரிய ஷாக்காக அமைந்துள்ளது