இந்தியாவையே உலுக்கிய சம்பவம் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தான்.. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தலைமையில் 15000 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தியுள்ளார்கள். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் 15000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் நிர்வாகியும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைதுசெய்துள்ளார்கள்.
இந்நிலையில் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து தற்போதுபாஜக மாநில துணைத்தலைவராக இருக்கும் கே.பி.ராமலிங்கம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே, பாஜக சார்பில், வளர்ச்சியடைந்த பாரதம், மோடியின் உத்திரவாத என்ற தலைப்பில் மோடி அரசின் பொதுமக்களின் கருத்து கேட்பு மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் KP.இராமலிங்கம் முதல் மனுவை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், மாநில உரிமைகளை பற்றி பேசும் கட்சிக்கு எதற்கு அயலக அணி? போதை மருந்து கடத்தவே அயலக அணி உருவாக்கினர். மத்திய அரசு ஊழல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதனால், மாநில அரசால் திருட முடியவில்லை. அதனால், அயலக அணியை உருவாக்கி அதிலிருந்து பணம் சம்பாதித்து தேர்தலில் ஈடுபடுகிறது என குற்றம்சாட்டினார். போதை மருந்து விற்க திமுக., கட்சி இறங்கியது அரசல்புரசலாக தெரிய வந்ததால் கட்சியை விட்டு வெளியே வந்தேன் என்றார்.
மேலும் இந்த சிக்கல் இடியாப்ப சிக்கலாக மாறியுள்ளது போதை கடத்தல் மன்னனும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் மற்றும் அவரின் தம்பிகள் வங்கி கணக்கிலிருந்து ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, நிதியுதவி செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.எனவே விவகாரம் பெரிதாகி கொண்டே போவதால் தமிழகத்தில் மிப்பெரிய அரசியல் மாற்றமே நடைபெறும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றார்கள். முதல்வர் முக ஸ்டாலின் உதயநிதி உதயநிதி மனைவி கிருத்திகா உதயநிதி என அணைத்து முக்கிய தலைகளுடன் தொடர்பில் இருப்பது போல் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் போட்டோ எடுத்து கொண்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.