நரிக்குறவ மக்கள் மீண்டும் அவமதிக்கப்பட்டு இருக்கும் சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா ஜோதிகா தயாரிப்பில் உருவான படம் ஜெய் பீம். இது வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றது. மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான அமேசான் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு நல்ல லாபம் சம்பாதித்துள்ளது சூர்யா குடும்பம். ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் ஜெய் பீம் பல விமர்சனங்ளை சந்தித்தது.
பழங்குடி மக்களுக்கு குரல் கொடுக்கும் படம் என போராளிகள் தூக்கி வைத்து கொண்டாடினர். எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் ஒலிக்கும் என சூர்யா பொங்கினார் . இந்த திரைப்படத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டது யாரையோ கொண்டாடுவதற்காக உண்மை போராளிகள் மறைக்கப்பட்டன. உணமையான குற்றவாளி பெயரை சொல்லவில்லை என பல உண்மைகளை திரித்து எடுக்கப்பட்ட படம் தான் ஜெய் பீம்.
தற்போது தமிழகத்தில் சமூக நீதி தான் எங்களின் உயிர் என நொடிக்கு நொடி கூறிவரும் தி.மு.க ஆட்சியில் சமூக நீதி என்பது வெறும் பெயரளவில் தான் என்பதை மீண்டும் ஒரு சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் வாரக் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த நரிக்குறவ சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 50 சகோதர சகோதரிகளை இருக்கை இருந்தும் தரையில் அமரச் செய்த அவலம் நிகழ்ந்துள்ளது.
மேலும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது.நரிக்குறவர்கள் தரையில் அமரவைக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதே போல் கடந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வந்த நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் வீட்டு மனை பட்டா வழங்கி சமூக நீதி பற்றி பேசினார் இதற்கு நடிகர் சூர்யா, ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது அவரின் கருத்தை தெரிவித்தார்.
ஆனால் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்தவர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு பட்டா கேட்டால் அரசோ எங்கோ ஒரு இடத்தை ஒதுக்கி அதிலும் குறுகிய இடத்தில் தங்களை அடைக்க பார்ப்பதாக அஸ்வினி உள்ளிட்டோர் குற்றம் சுமத்தி வீடும் வேண்டாம் இடமும் வேண்டாம் அன்று சொன்னது வேறு இன்று செய்வது வேறு என கொந்தளித்து அரசு அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
நாங்கள் நல்ல காலம் பிறந்தது என்று நினைத்தோம் சாமி ஆனால் இப்படி தலைகீழாக மாறும் என எதிர்பார்க்கவில்லை சாமி என கொந்தளிப்பில் சாபம் விட்டு வருகின்றனர் நரிக்குறவர் சமூகத்தினர். இந்த விவகாரம் குறித்து தமிழக ஊடகங்கள் மூடி மறைத்து வருவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.
முதல்வர் வழங்கிய வீடும் வேண்டாம், இடமும் வேண்டாம் என்று நரிக்குறவர்கள் போராட்டம் நடத்திய சம்பவத்திற்கு இன்று வரை நடிகர் சூர்யா வாய் திறக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இப்படிபட்ட சூழலில் தான், நரிக்குறவ இன மக்கள் மீண்டும் அவமதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாஜகவில் பழங்குடி இனத்தை சேர்ந்தவருக்கு குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பை அளித்தது பாஜக இதை பற்றியும் வாய்திறக்காமல் மௌனராகம் படுகிறார் சூர்யா.வெறும் படத்திற்காகாகவும் பணத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிக்கும் ஜெய் பீம் சூர்யா எங்கே என நெட்டிசன்கள் தேடி வருகிறார்கள்