சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஏற்றுமதியில் படைக்கப்பட்ட புதிய வரலாறு! தி இஸ் நியூ இந்தியா!

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஏற்றுமதியில் புதிய வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.இந்த 2021-22 நிதி நிலை ஆண்டின் முதல் கால் பகுதியான ஏப்ரல் மே ஜூன் மாதத்தில் இந்தியா 95 பில்லியன் டாலர்அளவி்ல் ஏற்றுமதி நடைபெற்று இருக்கி றது.அதாவது சுமார் 7 லட்சம் கோடிகளுக்கு ஏற்றுமதி நடைபெற்று இருக்கிறது.

கொரானா காலத்திற்கு முன் அதாவது 2018-19 ஆம் ஆண்டு ஏப்ரல் மே ஜூன். கால கட்டத்தில் 83 பில்லியன் டாலர் அளவில் தான் ஏற்றுமதி நடைபெற்று இருந்தது.ஆனல் கொரானாவின் இரண்டாம் அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அதையும் தாண்டி இந்தியாவில் உற்பத்தி துறைகள் செயல்பட்டு பொருட்களை உருவாக்கி ஏற்றுமதியில் இது வரை இல்லாத சாதனையை எட்டி இருக்கிறது.

இந்திய ஏற்றுமதி வரலாற்றில் 2018-19 ம் ஆண்டு தான் 330 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி நடைபெற்று சாத னையாக இருக்கிறது. அதையும் இந்த ஆண்டு முறியடித்து 400 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி நடைபெறலாம் என்று தெரிகிறது.கொரானா காலத்தில் இந்தியாவே லாக்டவுனில் இருந்த பொழுது மோடி ஆட்சியில் ஜிடிபி மைனசில் இருக்கிறது என்று நீலிக்கண்ணீர் வடித்த கோமாளிகள் இனி சில காலத்திற்கு மூடிக்கொண்டு இருப்பார்கள்.

உலகளாவில் ஜிடிபி வரிசையில் 11 வது இடத்தில் இருந்த இந்தியா மோடி ஆட்சியில் 5 வது இடத்திற்கு வந்து இருக்கிறது. ஆனால் மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ந்து விட்டது என்று அப்ரண்டிஸ்கள் அள்ளி விட்டு கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் இன்னும் சில வருடங்களில் இ ந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை தாண்டி உலகளவில் இந்தியா 3 வது இடத்தை அடையும் பொழுது ஆ க்ஸ்போர்டில் படித்த அப்ரண்டிஸ் பொருளாதார மேதை மன்மோகன்சிங்கிற்கும் இந்தியாவில் டீ விற்று பிரதமரான மோடிக்கும் இடையே உள்ள பொருளாதார அறிவை புரிந்து கொள்வார்கள். வலது சாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி

Exit mobile version