இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதிய சின்னம்.

இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ, இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதிய சின்னத்தை இன்று தில்லியில் மேஜர் தயான்சந்த் விளையாட்டு மைதானத்தில் அறிமுகப்படுத்தினார்.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் புதிய சின்னத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய திரு. ரிஜிஜூ, ‘’ எஸ்ஏஐ என்ற சொல்லே, விளையாட்டு சார்ந்த அனைத்து தரப்பினருக்கும் அந்த அமைப்பின் அடையாளத்தை விளக்கும். இந்தியாவின்  மூவண்ணம், சக்கரத்தின் நீல நிறம் ஆகியவை, தேசிய அளவில் உற்சாகத்தை அளிக்கும். உலக அரங்கில், விளையாட்டு துறையில் இந்தியாவுக்காக பங்கேற்று பெருமை படைத்த  பல பெரிய வீரர்களை எஸ்ஏஐ  உருவாக்கியுள்ளது’’ என்று கூறினார்.  

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version