இதுவரை ஜன் தன் வங்கி கணக்குகள், ஆதார், நேரடி மானியம் முதல் புதிய கல்வி கொள்கை வரை பல சீர்திருத்தங்களை மோதி தலைமையிலான அரசு எடுத்துள்ளது.
இன்னும் பல சீர்திருத்தங்களில் மும்முரமாக வேலை பார்த்து வருகிறது அரசு. அவற்றில் சில…
1, நீதித்துறை சீர்திருத்தங்கள் (Judicial Reforms) – கிரிமினல் சட்டம் (Criminal Laws), பொதுச் சொத்து சேதம் செய்வோர் மீது நடவடிக்கைக்கான (Destruction of public property) சட்டங்கள், நீதித்துறையில் நிர்வாக சீர்திருத்தங்கள் (ஆன்லைன் மனு இத்யாதிகள்), ஐ.ஏ.எஸ் போல ஐ.ஜே எஸ் (இந்திய நீதிபதிகள் சர்வீஸ் – National Judicial Service). இந்த ஐ.ஜே.எஸ் வந்தால், கொலீஜியம் இல்லாமல் போகும். வலைதளம் உபயோகிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை. வழக்குகள் கட்டாய மத்தியஸ்தம் (compulsory pre-litigation mediation) – எனப்பல.
2, காவல்துறை / சட்ட திருத்தங்கள்: மத்திய காவல் படைகளில் சேர விரும்புவோருக்கு 12ஆம் வகுப்புக்கு பின் இளங்கலை பட்டப்படிப்புகள் (bachelor degree courses), தேசிய போலீஸ் பல்கலைக்கழகம் (National Police University), தடய அறிவியல் பல்கலைக்கழகம். அது தவிர, 1860இல் பிரிட்டிஷ் ஏற்படுத்திய (CrPC & IPC) சட்டங்களில் திருத்தம் கொண்டுவர கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. வெறுப்பு பேச்சு (Hate speech) வரையறுத்தல் மற்றும் சட்டம்.
இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) ஏற்படுத்தப்பட்டது 1860இல்.
இந்திய ஆதாரங்கள் சட்டம் (Indian Evidence Act) ஏற்படுத்தப்பட்டது 1872.
3, தேர்தல் சீர்திருத்தங்கள்: லெட்டர்பேட் கட்சிகள் இல்லாமல் போக பல விதிமுறைகள், 100% மக்கள் வாக்களிக்கும் வகையில் (E-voting, block-chain method) சீர்திருத்தங்கள்.
4, தொழிலாளர் சட்டம் (labor law) திருத்தப்படுகிறது.
5, தொடரும் விவசாய சீர்திருத்தங்கள் (Agriculture reforms).
6, அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம்.
7, ஊடகங்களுக்கான சீர்திருத்தங்கள்.
8, நிதி அமைச்சக சீர்திருத்தம்: மேற்கத்திய நாடுகளில் இருப்பது போல அடிப்படை உரிமைகள் மசோதா (Bill of rights) .
ஆகஸ்ட் – செப்டம்பரில் பாராளுமன்றம் கூடவிருக்கிறது.
இவற்றில் எவை எப்போது அறிமுகமாகும் என்பது தெரியாது. ஆனால், இவை ஒவ்வொன்றும் – குறிப்பாக Bill of rights – மக்கள் வாழ்வில் பல சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் / அதிகாரிகள், இடைத்தரகர்கள் ஆட்டம் வெகுவாக குறையும்.
கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.