மக்கள் தொகையில் மிகப்பெரிய நாடான சீனாவில் தோன்றியது தான் தற்போது உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இதை கட்டுப்படுத்த முடியாமல் உலகமே திணறி வருகிறது. கொரோனாவால் உலகம் முழுவதும் 16000 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனா உருவாகிய சீனாவை விட இத்தாலி அமெரிக்க என அனைத்து நாடுகளிலும் தினமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி வருகின்றார்கள்
இந்த நிலையில், கொரோனா உருவான யுகான் மாகாணத்தில் புதிய வைரஸ் தொற்று பற்றியுள்ளது. இருந்து யுகான் மாகாணத்தில் ஷான்டாங்க் மாகாணத்துக்கு, பேருந்தில் சென்ற ஒருவர், திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இறந்தவரின் உடலை பரிசோதித்த போது, அவருக்கு, ஹன்டா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வைரஸ், எலிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவக் கூடியது.
அவருடன் பேருந்தில் பயணம் செய்த, மேலும், 32 பேருக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் முடிவுகள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிதாக, ஹன்டா வைரஸ் தோன்றியுள்ளது, சீன மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. அண்டை நாடுகளும் இதனால் அச்சம் அடைந்துள்ளனர்.