Friday, March 13, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பஹல்காம் தாக்குதல் : காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை களமிறங்கிய NIA அதிகாரிகள் டீம்! தமிழகத்தில் இறங்கும் சிறப்பு குழு!

Oredesam by Oredesam
April 28, 2025
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
nia team

nia team

FacebookTwitterWhatsappTelegram

டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) மேற்கொண்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் மட்டுமல்லாமல் பஹல்காம் படுகொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள், பயங்கரவாத சம்பவம் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனர்.பஹல்காம் பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள், அப்பகுதி மக்களிடம் பயங்கரவாத சம்பவம் மற்றும் பயங்கரவாதிகளின் அடையாளங்கள் தொடர்பாக கேட்டறிந்தனர். மேலும் பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்களாக சந்தேகப்படும் நபர்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அத்துடன் மகாராஷ்டிரா, ஒடிஷா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பஹல்காம் படுகொலை சம்பவத்தில் உறவுகளை பறிகொடுத்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தோரை நேரில் சந்தித்து, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விவரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் உருவபடங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. 3 பாகிஸ்தானியர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரை ஒருவரே இந்த கோரத் தாக்குதலை நடத்தியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இத்தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்த விசாரணை தொடர்பாக என்.ஐ. ஏ வட்டாரங்கள் கூறுகையில், பஹல்காம் தாக்குதலில் 7 பயங்கரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது; பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பேருக்கு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 2 பேர் உதவியிருப்பதும் தெரியவந்துள்ளது என்கின்றன.இதனிடையே ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள், ஸ்லீப்பர் செல்களின் வீடுகளை தேடி கண்டுபிடித்து அவற்றை வெடிவைத்து தகர்த்து அழிக்கும் நடவடிக்கைகளையும் அம்மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டும் வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரிகள் சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக மயிலாடுதுறையைச் சேர்ந்த அல்பாசித் என்பவரை சென்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் 16 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாலை முதல் சோதனைகள் நடந்தன. சந்தேகத்திற்கு உரிய நபர்களின் மறைவிடங்களில் நடத்தப்படும் இந்த சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்கும் உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கும் தொடர்புடைய நபர்கள் தொடர்பான ஆதாரங்களை திரட்டுவதே என்.ஐ.ஏ அதிகாரிகளின் நோக்கம் என தகவல்கள் கூறுகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக மயிலாடுதுறையைச் சேர்ந்த அல்பாசித் என்பவரை சென்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதம் மற்றும் ஆட்சேர்ப்பு வழக்குகளை என்ஐஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஐஎஸ்ஐஎஸ் ஊக்குவித்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை என்ஐஏ கைது செய்தது.

இந்த வழக்கில் என்ஐஏ விசாரணையில், கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் பயங்கரவாத செயலுக்கு நிதி வழங்க கூட்டு சேர்ந்தது தெரியவந்தது. தீவிரவாதம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட ஒரு கிளை வழக்கு தனித்தனியாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை என்ஐஏவால் கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வழிவகுத்தது.

இந்த நிலையில் பஹல்காம் இந்த தாக்குதலுக்கு பின்னால் ‘நாங்கள் தான் இருக்கிறோம்’ என்று ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ என்னும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.’தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா-வின் ஒரு பிரிவாக சொல்லப்படுகிறது.’தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பு ஆன்லைன் மூலம் இளைஞர்களை வேலைக்கு எடுத்தல், ஆயுதங்களை வாங்குதல், போதை பொருள்களை கொண்டு வருதல், தீவிரவாதிகளை ஊடுருவச் செய்தல் போன்ற நாசவேலைகளை செய்துவருகிறது எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தி ரெசிஸ்டன்ட் ஃபிரண்ட் அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. இந்த அமைப்பின் தலைவரான ஷேக் சஜ்ஜாத் தீவிரவாதி என அறிவித்தது. தற்போது இந்த அமைப்பின் கீழ் தான் தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கும் கோவை கார் குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் இருக்கிறதா என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

srirangam

மாணவி தற்கொலை…மகாராணி என்ன விட்டு போறியேடா…கதறிய தந்தை! கஞ்சா காதலனால் விபரீதம்..

April 22, 2024

முற்போக்குகளின் முட்டாள் தனத்தால் அவதிப்படும் இத்தாலி.

March 17, 2020
கால் நூற்றாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் பெரும் வளர்ச்சி கண்டுள்ள குஜராத் – வானதி சீனிவாசன் பெருமிதம்!

கால் நூற்றாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் பெரும் வளர்ச்சி கண்டுள்ள குஜராத் – வானதி சீனிவாசன் பெருமிதம்!

July 26, 2021
110 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் கல்லூரி கட்டும் தி.மு.க எம்.பி! தி.மு.க,திருமாவின் சமூகநீதி எல்லாம் ஊருக்கு மட்டும் தான்.

110 ஏக்கர் பஞ்சமி நிலத்தில் கல்லூரி கட்டும் தி.மு.க எம்.பி! தி.மு.க,திருமாவின் சமூகநீதி எல்லாம் ஊருக்கு மட்டும் தான்.

September 8, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x