கேரளா, மேற்கு வங்கத்தில் ஒன்பது அல் கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர்கள் பல இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொல்ல திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் முர்ஷிதாபாதிலும், கேரளாவில் எர்ணாகுளத்திலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து இன்று அதிகாலை தேடுதல் பணி நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 6 பேரும், கேரளாவில் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாநிலங்களுக்கு உள்ளே முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தவும், அதில் அப்பாவி மக்களை கொல்லவும் சதி செயல்களில் ஈடுபட்டிருந்ததாக என்.ஐ.ஏ அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கேரளா மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதிக்குட்பட்ட கம்பமாலா என்ற பகுதியில் திடீரென ஏழு மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி ஏந்தி கொண்டு , போராட்டத்தை துவக்கினார்கள் .
அந்த ஏழு பேரிடமும் துப்பாக்கி இருந்தது, இந்த பயங்கரவாதிகள் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் செய்கிறோம் என்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போஸ்டர்களையும் ஒட்டினார்கள். போராடியவர்களில் 7 பயங்கரவாதிகளில் 3 பேர் பெண்கள். மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள், துப்பாக்கியுடன் வந்து பொதுமக்கள் முன்னிலையில் பஜாரில் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியது, அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் அடைய செய்தது மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளும் கம்யூனிஸ்டுகள் என்பதனால் பிணராயி விஜயன் தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் அரசு.