திருவாரூருக்கு நேற்று வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பின்பு பேசிய அவர்,பாஜகவில் ஏராளமானோர் சேர்வதற்குக் காரணம் பிரதமர் மோடியின் நேர்மையான ஆட்சி என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார் .
வணிகர்களுடன் சந்திப்புஅதைத்தொடர்ந்து அங்குள்ள பெட்டிக் கடை ஒன்றில் வியாபாரம் எவ்வாறு நடைபெறுகிறது என கேட்டறிந்தார். பின்னர், அங்கு நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்சஉலகிலேயே வலிமை வாய்ந்ததலைவராக பிரதமர் மோடி உள்ளார்.
இந்தியாவில் அதிக வலிமைவாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. பொதுமக்கள் திரளானோர் பாஜகவில் உறுப்பினராகச் சேர்வதற்கு பிரதமர் மோடியின் நேர்மையான ஆட்சியே காரணம். பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.விவசாயிகள், ஏழை – எளியமக்கள் பயன்பெறும் வகையிலும், உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக உயர்த்தும் வகையிலும் ஆட்சி நடத்தி வருகிற பிரதமர் மோடிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், பொதுமக்கள் தங்களை பாஜகவில் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிழ்வின்போது பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மேலிட பார்வையாளர் பேட்டை சிவா,மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராகவன், மாவட்ட பொதுச் செயலாளர் வி.கே.செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















