வெள்ளை பேருந்தில் மட்டும் தான் பெண்களுக்கு இலவசமா மற்ற நகரமற்றும் மினி பேருந்தில் கிடையாதா என பெண்கள் வருத்தம் அடைந்துள்ளார்கள். அதுவும் வெள்ளை போர்டு பேருந்துகள் அதிகமாக வருவதில்லை. மற்ற சொகுசு பேருந்துக்கள் தான் அதிகமாக விடப்படுகின்றது. இதன் காரணமாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல நேரம் ஆகின்றது என்ற புகாரும் எழுந்துள்ளது. முக்கியமாக செல்வி ஜெயலலிதா முதல்வராக இந்து வேளையில் மினி பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டது, இதற்கு மக்களிடையே மிக பெரும் வரவேற்ப்பு இருந்தது. தெருக்கள் உள்ளே செல்லும் இந்த வகை மினி பேருந்துகளில் பயணிப்பவர்கள் அதிகமாக உபயோகப்படுத்தினார்கள்.
தற்போது திமுக ஆட்சியில் மாநகர பேருந்துகளில் இலவச பயணம் என்று அறிவித்தார்கள். அதற்கு வரவேற்பு இருந்தது ஆனால் தற்போது அது குறைந்து வருகிறது. வெள்ளை போர்டு பேருந்துகள் மட்டுமே இலவசம் மற்ற பேருந்துகளில் கட்டணம் என்பதால் பெண்கள் சற்று அரசின் மீது கோபம் கொண்டுள்ளார்கள்.
மினி பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் முதியோர்களுக்கு 13 ரூபாய் வரை டிக்கெட்டுக்கு பணம் கொடுத்து பயணம் செய்ய வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
மேலும் அதிக அளவிலான வெள்ளை போர்டு நகர பேருந்துகள் இயக்கினால் மட்டுமே இந்த இலவசம் மக்களை சென்றடையும் இல்லையென்றால் அனைத்து மாநகர பேருந்துகளில் இலவசம் அறிவிக்க வேண்டும். முதியோர் மற்றும் பெண்கள் மாநகர பேருந்துகளில் ஏறிவிட்டு நடத்துனர் டிக்கெட் கேட்கும் போது தான் இந்த விவரங்கள் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு தெரிகிறது.
இன்று சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் 50% வரை பயணிகள் பயணிக்கலாம் என அரசு தளர்வு கொடுத்துள்ளது அதிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என ஏற்கனவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த அறிவிப்பின்படி இன்று சென்னை முழுவதும் இலவச பயணம் செய்து வரும் நிலையில் நகர்ப்புறங்களில் உள்ள தெருக்களில் பயணம் செய்யும் மினி பேருந்துகளில் டிக்கெட் வசூலிக்கப்படுவதால் பெண்கள் முதியோர்கள் இதனால் வேதனை அடைந்துள்ளார்கள்.
கோயம்பேடு மார்க்கெட் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் பூ விற்பனை பழ விற்பனை செய்யும் முதியோர்கள் இதனால் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள்
வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி குப்பத்திலிருந்து கோயம்பேடு பகுதிக்கு மினி பேருந்தில் பயணித்த மூதாட்டி கன்னியம்மாள் என்பவரிடம் 13 ரூபாய் டிக்கெட் வசூல் செய்யப் பட்டதை மிகவும் வேதனையாக தெரிவித்தார்.ஒயிட்போர்டு பேருந்துகளில் மட்டும் இலவசமாக பெண்கள் முதியோர்கள் பயணிக்கும் நிலையில் மினி மற்றும் அனைத்து பேருந்துகளிலும் சலுகை வழங்கப்பட வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.