டெல்லியில் பெண் போலீஸ் ஒருவர் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான அந்த இளம் பெண் டெல்லி காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார் இந்த வேலைக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு அந்தத் துறையில் சேர்ந்தார். அவர் டெல்லியில் ஒரு சிவில் பாதுகாப்பு தன்னார்வலராகவும் உள்ளார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 26 ம் தேதி வேலைக்கு சென்ற ரபியா சைஃபி வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும், மகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே இது தொடர்பாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, மகள் குறித்து எந்த தகவலும் இல்லாததால் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர்.
பெண் காவலர் உடல் சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் உடலில் 50 இடங்களில் குத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்ட்டுள்ளத பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அவரது குடும்ப உறுப்பினர்களையும் மற்றவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாதபடி பெண்ணின் உடல் சிதைக்கப்பட்டதால் ஆதாரங்களை சேகரிப்பதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் காவலரின் நண்பர்களில் ஒருவரான நிஜாமுதீன், அவரைக் கொன்றதாகக் கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தான்
நிஜாமுதீன், கொலைசெய்யப்பட்ட பெண்ணும் தானும் பல வருடங்களாகக் காதலித்துவந்ததாகவும், அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்துவந்ததாகக் கூறியிருக்கிறான் .
மேலும் கூறுகையில். கொலைசெய்யப்பட்ட பெண் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக எனக்குத் தெரிந்தது. அது குறித்துக் கேட்டபோது, எங்கள் இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது.
பலமுறை சொல்லியும் அவள் கேட்கவில்லை. அதனால் அவளைக் கொலை செய்ய முடிவெடுத்தேன். ஆகஸ்ட் 27-ம் தேதியன்று, பணிமுடிந்து திரும்பிக்கொண்டிருந்த அவளை ஃபரிதாபாத்தின் சூரஜ்குண்ட் பகுதிக்கு அழைத்துச் சென்றேன்.
இருவருக்கும் இடையே நீண்டுகொண்டே சென்ற வார்த்தை மோதல்கள் ஒருகட்டத்தில் கொலையில் முடிந்தது. அவளை நான் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டேன்” என்று அதே உக்கிரத்துடன் காளிந்தி குஞ்ச் காவல் நிலைய போலீஸாரிடம் நிஜாமுதீன் கூறியிருக்கிறான். அந்தப் பெண்ணின் உடலில் 50 இடங்களில் கத்திக்குத்து இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய இளம்பெண்ணின் உறவினர்கள், “எங்கள் மகள், எங்கள் பேச்சைக் கேட்காமல் ஏமாற்றுப் பேர்வழி நிஜாமுதீனின் வலையில் வீழ்ந்தார். எங்களிடமிருந்துஎங்கள் பெண்ணை பிரித்துச் சென்ற நிஜாமுதினை திருமணம் செய்துகொண்டாரா, இல்லையா என்பதுகூட உறுதியாக எங்களுக்குத் தெரியாது.
நிஜாமுதீன், தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து எங்கள் மகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதை அவள் வெளியில் கூறிவிடுவாளோ என்ற பயத்தில்தான் அவர்கள் சேர்ந்து அவளைக் கொலை செய்திருக்கின்றனர்.
எங்கள் மகளின் மார்பகங்கள் அறுக்கப்பட்டுள்ளன. அவளின் உடலில் அடித்துத் துன்புறுத்தியதற்கான காயங்கள் ஏராளமாக உள்ளன. அதேபோல், அவளுடைய அந்தரங்க உறுப்பும் காமுகர்களால் சிதைக்கப்பட்டிருக்கிறது. என்று வேதனையுடன் கோரி உள்ளார்கள்
Source : https://www.newsbricks.com/india/rabiya-saifi-rape-case/45762