உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் மற்றும் 10 கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோன தொற்று உறுதி!

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்கவில்லை . தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி சசெய்யப்பட்டுள்ளது, பாகிஸ்தான் அணியை சேர்ந்த 3 வீரர்களுக்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் 19வது இடத்திலுள்ள பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவுக்கும். குரோஷியாவின் போர்னா கோரிச்சிற்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.தவிர செர்பிய கிளப்பின் 5 வீரர்களுக்கும் தொற்று இருப்பது தெரிந்தது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஷதாப் கான், ஹைதர் அலி, மற்றும் ஹாரிஸ் ராவ்ஃப் ஆகிய வீரர்களுக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் ஒப்பந்த வீரர்கள், பணியாளர்கள் உட்பட 100 பேருக்கும் மேல் கரோனா சோதனை நடத்தப்பட்டது. கரோனா சோதனையில் 7 பேருக்கு கரோனா பாதிப்பு தெரியவந்துள்ளது.

தென் ஆப்பிரிக்க நாட்டு மருத்துவ விதிகளின் படி கரோனா பாதிப்பு நோயாளிகள் பெயர்களை வெளியிடக்கூடாது. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தெரிவித்து விட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

Exit mobile version