சிவகாசி பா.ஜ.க நிர்வாகிகள் மத்தியில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை சரவெடியாய் வெடித்து தள்ளினார். திமுகவை மிகவும் கடுமையாக தாக்கி பேசியது வைரலாகி வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது ;
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜகவிற்கான இடம் உருவாகி விட்டது. அடுத்து தமிழகத்தில் பா.ஜ.கவா, தி.மு.கவா என்று யோசிக்கும் நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள்.
அதிமுகாவுடனான கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை. எதிர் வரும் காலம் பாரதிய ஜனதா கட்சிக்கான காலம். இதுவே தி.மு.கவின் கடைசி ஆட்சி காலம். இனிமேல் திராவிடத்திற்கு தமிழ்நாட்டில் வேலையில்லை.
சிவகாசியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் போது பட்டாசு தொழில் மேம்படுத்துவதற்கு, மத்திய அரசு எப்பொழுதும் துணை நிற்கும்.
கொரோனோ காரணமாக மட்டுமே பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலாளர்களை பாதிக்கும் எந்த முடிவையும் மத்திய அரசு மேற்கொள்ளாது என்று உறுதி தெரிவித்தார்.
கடவுள் இல்லை என்று சொன்ன ஸ்டாலின், ஆண்டாள் கோவில் கோபுரமுத்திரையை பயன்படுத்துகிறார். கடவுள் இருக்கிறார் என்பதை ஸ்டாலின் ஒத்துகொள்ள வேண்டும். கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் சட்டமன்றத்தில் கடவுளைப் பற்றியே விவாதித்து வருகின்றனர்.
மொட்டை போட இலவசம் என அறிவிக்கின்றனர். இதனை திமுகவினர் மொட்டை போட வந்து விட்டதால் என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.
திமுகவை ஒழித்துவிட்டு பாஜகவை ஆட்சி அமைக்க வைப்பதே என் வேலை. வழக்கு போட்டு மிரட்டினாலும், எதற்கும் பயப்பட கூடிய ஆள் நான் இல்லை என அனல் தெறிக்கவிட்டார் அண்ணாமலை!