இந்தியாவில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும் வெளிநாடுகளில் இருந்து மடிக்கணினி, கணினி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.
இந்தக் கட்டுப்பாடு நவம்பா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முக்கியமாக சீனா போன்ற இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து இறக்குமதி குறைக்கப்படுகிறது.இது மற்ற நாடுகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
மேலும் இந்தியாவின் தயாரிக்கப்டும் மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது 2013-14-ல் 6600 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 2021-22-ல் சுமார் 88 சதவீதம் அதிகரித்து 12,400 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகியுள்ளது.
இந்தியா ஏற்றுமதியில் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுகிறது. 2021 ஜனவரியில் 27.54 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இந்தியாவின் வணிகப் பொருட்கள் ஏற்றுமதி 2022 ஜனவரியில் 23.69 சதவீதம் அதிகரித்து 34.06 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மின்னணு சாதனங்கள் இறக்குமதி தொடர்பான இந்தியாவின் முடிவுக்கு அமெரிக்கா தன் கவலையை தெரிவித்திருந்தது. ஏனென்றால் அமெரிக்காவின் சந்தை என்றால் அது இந்தியா தான். அங்கே இறக்குமதிக்கு தடை விதித்தால் அமெரிக்காவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி முற்றிலும் முடங்கி விடும் பொருளாதார சிக்கல் ஏற்படும் இதன் காரணமாகவே ஆழ்ந்த கவலையில் உள்ளது அமெரிக்கா .
இந்நிலையில், இரு நாடுகளும் ஒப்புக்கொள்ளும் வகையில், பிரச்னைகளுக்குத் தீர்வு காண சம்மதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி சபை தெரிவித்து உள்ளது.
சமீபத்தில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்தரின் டாய், இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தொழில்நுட்ப உபகரணங்களுக்கான இந்தியாவின் இறக்குமதி உரிமத் தேவைகள் தொடர்பான கவலைகளை டாய் எடுத்துரைத்தார். இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், அமெரிக்க ஏற்றுமதியில் எந்த வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த கோரப்பட்டது.
மேலும் இது குறித்து பரிசீலித்து, தங்கள் கருத்துக் களை வழங்க, சம்பந்தப்பட்ட தொழில் துறையினர் மற்றும் அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் டாய் இந்திய வர்த்தகத்துறை அமைச்சரை கேட்டுக் கொண்டார்.
இந்த பிரச்னையை மேலும் ஆராய்ந்து, இரு நாடுகளின் கவலையும் நிவர்த்தி செய்யும் ஒரு தீர்வைக் காண ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உலக வர்த்தக அமைப்பில் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்தும், விவசாய பொருட்கள் இறக்குமதி குறித்தும் சந்திப்பின்போது விவாதிக்கப் பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.