சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலபூஜை கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அன்று இரவு நடை சார்த்தப்பட்டது. இதையடுத்து மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 30-ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது.
வரும் 15-ம் தேதி மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து வரும் 20-ம் தேதி சபரிமலை நடை சார்த்தப்படும். மண்டலகால பூஜைகளின்போது பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனால் தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டதுடன், ஆன்லைன் முன்பதிவுகளிலும் கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது ஐயனை காண வேண்டும் 48 நாட்கள் விரதம் இருந்து 18ம் படியானை தரிசிக்க 18 மணி நேரம் ஆகிறதாம். மண்டல காலத்தில் பக்தர்கள் வேதனையுடனும், கண்ணீருடனும் 18 மணி நேரம் காத்திருந்தும் அய்யப்பனை பார்க்க முடியாமல் திரும்பி சென்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்து வருகிறது.
மேலும் சபரிமலையில் கடந்த திங்கள்கிழமை முதல் வழங்கப்படும் அரவணையின் எண்ணிக்கை ஒருவருக்கு ஐந்தாகக் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றிலிருந்து ஒருவருக்கு 2 அரவணை டின்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
இனி சபரிமலைக்கு பக்தர்கள் வரக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இது போன்ற செயலில் இறங்கியுள்ளதா கேரள அரசு என ஐயப்பனின் பக்த்ர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
கேரள மாநிலம், சபரிமலையில் திருப்பதி மாடல் என்ற திட்டத்தை அரசு அறிவித்து, ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.ஆனால், அதற்கான எந்த ஏற்பாடுகளும் இங்கு செய்யப்படவில்லை.
ஒரு நாளில் எத்தனை பக்தர்களை அனுமதிக்க முடியும் என்ற கணக்கில்லாத தேவசம்போர்டு, தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனம் என, சொல்லிக் கொண்டிருக்கிறது.ஆனால், பம்பையில் இருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தல் வருவதற்கு பக்தர்கள் 14 – 16 மணி நேரம் நிற்கின்றனர். அளவுக்கு அதிகமான கூட்டம் வந்ததால், பம்பையில் பக்தர்கள் தடுக்கப்பட்டனர்.
வாகனங்கள் பழைய படி, மீண்டும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றன. முன்னர் எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு மட்டும் இப்பிரச்னை உள்ளதற்கு கேரளா அரசோ, தேவசம்போர்டோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
காணிக்கை வருமானத்திலும் குறைவு, பக்தர்கள் எண்ணிக்கையிலும் குறைவு. ஆனால், இந்த நீண்ட காத்திருப்பு எதற்காக என்ற கேள்விக்கு யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை. மாறாக பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறும் சம்பவங்கள் நடக்கின்றன.
நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர், 18 படி ஏறி தரிசனத்திற்கு சென்ற தஞ்சாவூர் பக்தர் தயானந்த், 24, என்பவரை போலீசார் தாக்கிய சம்பவம் விவாதத்தை கிளப்பிஉள்ளது.
இவர் சன்னிதானம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்ட காத்திருப்பு, துாக்கமின்மை காரணமாக தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக பம்பை திரும்புவதற்கு பதில் சன்னிதானத்திலேயே ஆங்காங்கே துாங்குவதால் நெரிசல் காணப்படுகிறது.
நேற்று முன்தினம் காலை, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட 15 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் நேற்று மதியம் வரையிலும் சன்னிதானம் அருகே செல்ல முடியாததால், இந்த குழுவை சேர்ந்த ஆனந்த் உட்பட சில பக்தர்கள் தரிசனம் செய்யாமல் திரும்பினர்.
சிலர் தங்கள் இரு முடியை பிற பக்தர்களிடம் கெஞ்சி கூத்தாடி அபிஷேகம் செய்யும்படி கூறி விட்டு திரும்புகின்றனர்.பக்தர்களின் கண்ணீருக்கு விடை கிடைக்காமல் மண்டல, மகர விளக்கு கால சீசன் இன்னும் சில நாட்களில் நிறைவு பெற உள்ளது.
மிகப்பெரிய புண்ணிய ஸ்தலத்தில் ஒரு சீசனை நடத்துவதில் தேவசம் போர்டும், அரசும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதற்கு காரணம் அங்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தான். தமிழகத்தை போல் கடவுள் நம்பிக்கையில் பெரிதும் இல்லாததே காரணம். இனி சபரிமலைக்கு பக்தர்கள் வரக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இது போன்ற செயலில் இறங்கியுள்ளதா கேரள அரசு என ஐயப்பனின் பக்த்ர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















