தமிழக பா.ஜ.க மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம்! அண்ணாமலையின் அதிரடி ஆட்டம்!

தமிழகத்தில் பா.ஜ.கவை வலுப்படுத்த தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக புதிய இளம் தலைவர் முன்னாள் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வானதி சீனிவாசனுக்கு தேசிய மகளிர் அணி பதவி என தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழக பா.ஜ.க தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலையை அறிவித்தது தேசிய பா.ஜ.கட்சி. இளம் வயதில் ஒரு கட்சியின் தலைமை பதவியை அளித்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை பதவி ஏற்றதிலிருந்து பாஜக புது உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அண்ணாமலை. அவர் செல்லும் இடங்களில் மிக பெரிய வரவேற்பு வேண்டாம் எளிமையான முறையில் இருங்கள் என்று அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.பிரதமர் மோடி அவர்களின் நலத்திட்டங்களால் பயனடைந்த மக்களை வீடுகள் தோறும் செல்ல வேண்டும் அவர்களிடம் மோடி அரசின் மேலும் பல திட்டங்கள் குறித்து அவர்களிடம் பேசவேண்டும். கட்சியின் கொள்கையை விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சுற்று பயணம் மேற்கொண்டார். பநாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை அவர்கள் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 5ம் தேதி காலை 9 மணிக்கு தஞ்சாவூரில் தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சீன எல்லை உட்பட பல இடங்களிலும் பிரதமர் திருக்குறளை எடுத்துக்காட்டு கூறி பேசியிருக்கிறார். அதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது போல் நிச்சயமாக திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 5ம் தேதி காலை 9 மணிக்கு தஞ்சாவூரில் தமிழ்நாடு பாஜக சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும். மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க தமிழக பா.ஜ.க அனுமதிக்காது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போன்று மீனவர்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யாததால் தமிழக அரசை கண்டித்து நாளை பாஜக போராட்டத்தில் குதிக்கவுள்ளது. எனகூறினார்.

மேகதாது அணை விவகாரத்தில் பாஜகவை காரணம் காட்டி அரசியல் செய்யலாம் என நினைத்த பல கட்சிகளுக்கு அண்ணாமலை அறிவித்த போராட்டம் கதி கலங்க செய்துள்ளது. அண்ணாமலை அவர்கள் அதிரடி அரசியலில் இறங்கியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.

Exit mobile version