இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ தலைமையில்
நடைபெற்று முடிந்து இருக்கிறது.இதில்ஈரானுக்கு கடுமையான பதிலடியை அளிக்க வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.இஸ்ரேல் ஈரானின் அணு ஆய் வு .மையங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தலாம் என்று செய்திகள் வருகின்றன. இஸ்ரேல் ஈரானின் அணு ஆராய்ச்சி நி லையங்களை குறி வைத்தால்முதல் இடத்தில் இருக்கப்போவது நடான்ஸ் தான்.ஈரானில் மொத்தம் 10 இடங்களில் அணு ஆராய்ச்சி சம்பந்தமான வேலைகள் நடைபெற்று வருகிறது.இதில் நடான்ஸ் நகரில் உள்ள அணு ஆராய்ச்சி கூடம் தான் மிக முக்கியமானது ஆகும் ஒரு வேளை ஈரானின் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று இருந்தால் ஈரா னின் அணு ஆயுதங்கள் இங்குதான் இருக்கும்.

ஈரானின் அணு ஆயுத திட்டத்தி ல் முக்கிய மையமாக இருக்கும் நடான்ஸ் அணு ஆராய்ச்சி நி லையம் டெக்ரானு க்கு சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் இஸ்பகான் மாநிலத்தில் நடான்ஸில் உள்ள ஒரு பாலைவன பகுதியில் அண்டர் கிரவுண்ட்டில் அமைந்து இருக்கிறது. இங்கு தான் யுரேனியத்தை செறிவூட்டும் ஆய்வு கூடம் இருக்கிறது.அதனால் ஈரானின் அணு ஆயுத சோதனை வெற்றி பெற்று இருந்தால் அதன் முழு
பொறுப்பும் இந்த நடான்ஸ் அணு ஆய்வு நிலையத்தையே சேரும்.
.
2008 ம் ஆண்டில் ஈரான் நாட்டின் அப்போதைய அதிபர மஹ்மூத் அஹ்மதிநெஜாத் நடான்ஸ் அ ணு ஆய்வு கூடத்திற்கு வந்து அணு ஆயுத ஆராய்ச்சிகளை முடுக்கி விட்டு சென்றதற்கு பிற கு தான் உலகம் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று உறுதி செய்தது.அதற்கு பிறகு தான் இஸ்ரேல் இந்த இடத்தை கண்காணிக்க ஆரம்பித்தது.அமெரிக்காவும் ஐ நா சபையும் ஈரானின் அணு மின் சோதனைகளுக்கு தடை போ ட ஆரம்பித்தது.இஸ்ரேலின் மொசாத் களத்தில் இறங்கியது

2009 ம் ஆண்டு ஜூன் மாதம் நாடன்ஸ் அணு ஆய்வு கூடத்தில் உள்ள யுரேனியத்தை செறிவூட்டும் கூடங்களில் உள்ள 9000 முனைகளில்1000க்கும் மேற்பட்ட முனைகள் செயல் இழந்து நின்றது அதாவது யுரேனியம் செறிவூட்ட ப்பட்டு வருகின்ற குழாய்களின்அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வகையில் அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த கம்யூட்டர்களி ன் மூலமாக செறிவூட்டப்படும் வேகம் அதிகமாக்கபட்டு நடான்ஸ் அணு ஆய்வு கூடத்தில் உள்ள இயந்திரங்கள் முடங்கி விட்டன.

அப்பொழுது தான் உலகம் முத ன் முதலில் ஸடக்ஸ்நெட் என்கிற கம்யூட்டர் வைரசை பற்றி கேள்விப்பட்டு திகைத்து நின்றதுஉலகின் முதல் சைபர் அட்டாக்எது என்றால் அது ஈரானில் உ ள்ள நடான்ஸ் அணு ஆய்வு கூ
டத்தில் மொசாத் நடத்திய சைபர் அட்டாக் தான்.நடான்ஸ் அணு ஆய்வு கூடத்தி ல் உள்ள கம்யூட்டர்களில் இருந் த ஸ்டக்ஸ்நெட் வைரஸ் வழியாக மொசாத் யுரேனியத்தை செறிவூட்ட பயன்படுத்தும் சீமென்ஸ் நிறுவனத்தின் சென்ட்ரிப்யூ ஜ் உபகரணங்களை தப்பும் தவ றுமாக செயல்பட வைத்தது.

அதிக அழுத்தங்களால் அணு உலை வெடித்து விடும் என்பதால்பயந்து போன ஈரான் நடான்ஸ்
ஆலையின் செயல்பாட்டை நிறுத்தி வைத்தது. சுமார் 6 மாதங்கள் கழித்து தான் ஈரான் இஞ்சி னியர்களுக்கு என்ன பிரச்சனைஎங்கு பிரச்சனை என்று கண்டுபிடிக்க முடிந்தது.நடான்ஸ் அணுஉலையை தற்காலிகமாக மூடி விட்டு எங்கே தவறு ஏற்பட்டது? என்று 6 மாதமாக ஆராய்ச்சி செய்த ஈரான் அரசு கடைசியில் நடான்ஸ் அணு ஆய்வு கூடத்தில் வேலை பார்த்துவந்த எரிக் என்கிற மொசாத்உளவாளியை கண்டு பிடித்து அவரை ஈரான் அரசு கொலை செய்தது.பிறகு சில மாதங்களுக்கு பிறகு நடான்ஸ் அணு ஆய்வு கூடத்தில் வேலைகள் ஆரம்பத்தது.அதற்கு பிறகு மொசாத் செய்தவேலைகளை பார்த்தால் நிஜமாகவே மிரண்டு விடுவோம்.

2009 ல் நடான்சில் நடைபெற்றசைபர் தாக்குதலுக்கு பிறகு மொசாத் நடான்சில் உள்ள அ ணு விஞ்ஞானிகளை தேடிப்பிடி த்து அழிக்க ஆரம்பித்தது. 2010 ம் ஜனவரி மாதம் 12 ம் தேதி காலை ஈரானின் அணு விஞ்ஞானிகள் ஒருவரான டாக்டர்மசூத் அலி முகம்மதுவை அவரது வீட்டின் அருகே அவர் காரில் ஏறும் பொழுது ஒரு மோட்டார்பைக் தானாக வந்து அவரின் கார் மீது மோதி மோட்டார் பைக்கில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்ததால் கொல்லப்பட்டார். டாக்டர் மசூத் அலி முகம்மது டெ க்ரானில் இருந்து அடிக்கடி நதான்ஸ் அணு இலக்கு செல்வதை மோப்பம் பிடித்த மொசாத் அவரை காலி செய்து விட்டது.

அடுத்து 2010 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ம் தேதி மஜித் ஷஹ்ரி யாரி என்கிற அணு விஞ்ஞானிகாரில் சென்று கொண்டு இருந்த பொழுது போக்கில் சென்று கொண்டு இருந்த 2 பேர் வெடிகுண்டுகளை அவரது கார்ல் வெளிப்புற கதவில் பொருத்தி விட்டு 100 அடி தூரத்தில் இருந்து ரிமோட் மூலமாக வெடி குண்டுகளை வெடிக்க வைத்து மஜித்ஷஹ்ரியாரியை கொலை செய்தது.

மஜித் ஷஹ்ரியும் நடான்ஸ் அ ணு ஆய்வுகூடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தவர் தான்.அணு விஞ்ஞானி மஜித் ஷஹ்ரி கொல்லப்பட்ட அதே நாளில் பெரிடூன் அப்பாஸி என்கி ற அணு விஞ்ஞானியின் காரி ன் பின் பகுதியில் ஒரு மோட்டார் போக்கில் வந்தவன் வெடிகுண்டை இணைத்து விட்டு தூரத்தில் நின்று ரிமோட்டை வைத்து வெடிக்க வைத்தான்.ஆனால் பெரிடூன் அப்பாஸின் நல்ல நேரம் அந்த வெடிகுண்டு வெடிக்கும் முன்பே காரில் இருந்து விழுந்து விட்டதால் வெடிகுண்டு கார்ல் வெடிக்காமல் ரோட்டில் வெடித்தது. வெடிச்சத்தம் கேட்ட பயத்தில் பெரிடூன் அப்பாஸ் காரின் பிரேக்கை அழுத்தகார் தடுமாறி ஆக்சிடெண்ட் ஆ கியது.இருந்தாலும் பெரிடூன் அப்பாஸ் உயிர் தப்பி விட்டார்.இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் பெரிடூம் அப்பாசை ஈரானின் அணு சக்தி அமைப்பின் தலைவராக நியமித்து ரகசியமான இடத்திற்கு கொண்டு சென்றது.

அடுத்து டேரியஷ் ரெசைனிஜாட்என்கிற அணு விஞ்ஞானி. இவர் அணு சக்தியில் நியூட்ரான்க ளின் பங்களிப்பை ஆய்வுசெய்வதில் நடான்ஸ் அணு ஆய்வு கூடத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த அணு விஞ்ஞானி.இவரையும் 2011 ம் ஆண்டு ஜூலை23 ம் தேதி ஒரு மோட்டார் பைக்கில் வந்தவன் சுட்டு கொன்றா ன்.அடுத்து முஸ்தபா அஹ்மதி ரோஷன் என்கிற அணு வின்ஞானி.இவரும் நாதன்ஸ் அணுஆய்வு கூடத்தில் உயர் பதவியில் இருந்த விஞ்ஞானி. இவரையும் 2012 ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி இவருடைய காருக்கு அ ருகே நின்ற ஒரு மோட்டார் பைக்கில் இருந்த வெடிகுண்டு வெடிக்க முஸ்தபா அஹ்மதி ரோஷன்
கொல்லப்பட்டார்.

இவர் நடான்ஸ் அணு ஆய்வு கூ டத்தில் மிக உயர்ந்த பதவியில்இருந்து ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சியில் மிக சிறந்த பங்களிப்பை அளித்து இருப்பதால்நடான்ஸ் அணு ஆய்வு கூடத்திற்கு இவரது பெயரை வைத்துஇருக்கிறார்கள்.இந்த அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் படுகொலைகளுக்கு பிறகு ஈரானின் அணு மின் ஆராய்ச்சியை அமெரிக்காவும் ஐநா சபையும் சில ஒப்பந்தங்கள் மூலமாக 2013 ல் முடக்கியதால் மொசாத்தும் நடான்ஸ் அணு ஆய்வு விஞ்ஞானிகளை கண்டு கொள்ள வில்லை. 2018 ஆண்டு மே மாதத்தில் ஈரான் ஐநா சபை மற்றும் அமெரிக் கா விதித்த நிபந்தனைகளில் இருந்து வெளியேறிய பிறகு அணு ஆய்வு பணிகளை மீண்டும் ஆரம்பித்தது. மொசாத்தும் தூக்கத்தில் இருந்து விழித்து வழக்கமான வேலைகளை ஆரம்பித்தது.

2013 -2018 வரை 5 ஆண்டு காலஅணு ஆய்வு தடை என்று ஈரான் வெளி உலகிற்கு தெரிவித்துகொண்டு மிக ரகசியமாக ஆய்வில் ஈடுபட்டு கொண்டு இருந்தது.2020 ம் ஆண்டு ஜூலை 2 ம் தே தி இந்த நடான்ஸ் அணு ஆராய்ச்சி தளத்தில் 3 இடங்களில் வெ டிகுண்டுகள் வெடித்து பள்ளங்கள் உண்டானது. ஆனால் நடான்ஸ் அணு ஆய்வு கூடத்திற்குஎந்த பிரச்சனையும் வரவில் லை.ஏன் என்றால் நடான்ஸ் அணு ஆஆய்வு கூடம் பூமிக்குஅடியில்சுமார் 90-100 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்ட ஒரு ரகசியமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதனால் பங்கர் பஸ்டர்கள் கூட இதனை தாக்க முடியாது.அந்தஅளவிற்கு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறது.

2020 ம் ஆண்டு நவம்பர் 27 ம் தேதி நடான்ஸ் அணு ஆய்வு நிலையத்தை வழி நடத்திய ஈரானின் அணு சக்தி திட்டத்தின் தலைவரான மொக்சென் பக்ரிசாதே காரில் வரும் பொழுது ஒரு டிரக் கில் இருந்த மெசின்கன் தானா க 13 குண்டுகளை பொழிந்து அ வரை கொன்றது.ஆச்சரியம் அல்லவா..மனிதன் கைகளில் உள்ள மெ ஷின் கன் சுடுவதை படங்களி ல் பார்த்து இருப்போம்.ஆனால் ஒரு மெஷின்கன் தானாகவே ஒருத்தரை அடையாளம் கண்டு சுட்டு இருப்பது ஆச்சரியம் தானே..

ஒரு மெசின்கன் தன்னுடைய அர்டிபிசியல் இன்டெலிஜென் ஸை வைத்து அவர் தான் ஈரா னின் அணு ஆயுத தலைவர் மொக்சன் பக்ரிசாதே அவர் இ ஸ்ரேலின் எதிரி என்று அடையாளம் கண்டு சுட்டு கொன்றது என் றால் மொசாத்தில் உள்ள யூதர் களின் மூளை எப்படி இருக்கிற து என்பதை அறிந்து கொள்ள லாம்.பதிலுக்கு ஈரானின் அணுசக்தி தந்தையையே காப்பாற்றமுடியாத ஈரான் எப்படி ஈரான் அதன் மக்களை காப்பாற்ற முடியு ம்?என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

2021 ம் ஆண்டு ஏப்ரல் 10 ம் தேதிமோசாத் நடத்திய ஒரு சைபர்தாக்குதல் நதான்ஸ் அணு ஆய் வு கூடத்திற்கு மின்சாரம் வழங் கி வந்த பவர் பிளான்டை செய ல் இழக்க வைத்து நதான்ஸ் அணு ஆய்வு கூடத்தையே இருளில் மூழ்க வைத்தது.இப்படி ஏகப்பட்ட சாகசங்களை மொசாத் நடான்ஸ் அணு ஆய்வு மையத்தில் நடத்தி இருக்கிறது.போர் அறிவிப்பு இல்லாமலேயேஇஸ்ரேல் ஈரானின் அணு ஆயுதகனவை நிறைவேற்ற கூடிய ந டான்ஸ் அணு ஆய்வு நிலையத்தையும் அணு விஞ்ஞானிகளையும் சத்தமேயின்றி அழிக்க முய ன்றது என்றால் இனி நேரடியா க தாக்குதல் என்று வந்து விட் டால் சும்மா விட்டு விடுமா? சுத்தமாக முடித்து விடும்.
.

Exit mobile version