ஆக்கிரமித்து கட்டப்பட்ட சர்ச்! துணிச்சலான இளம் பெண் வெளியிட்ட வீடியோ! நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?

வளிமண்டல அழுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது குறிப்பாக தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கன மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இதன் காரணமாக சென்னை வெள்ள காடாக மாறியது. முக்கியாமான இடங்களில் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மின்சாரம் இல்லாமலும் உணவு இல்லாமலும் மக்கள் இன்னல்களை சந்தித்தனர்.

மழை வெள்ளத்திற்கு காரணம் ஏரிகள் இருந்த இடம் குடியிருப்புகளாக மாறியது தான் இதற்கு காரணம் ஆகும். மேலும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யாமல் அலட்சியமாக இருந்தது மட்டுமின்றி மழை எச்சரிக்கை வந்த பின்பும் அரசு அதிகாரிகளை இடம் மாற்றியது தமிழக அரசு. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஒரு இளம் பெண் வீடியோ வைரலானது. சென்னை கீழ்கட்டளையில் உபரி நீர் வெறியேறும் ஒரு கால்வாய் பகுதியில் நின்று கொண்டு வீடியோவை வெயிட்டுள்ளார் அந்த துணிச்சலான இளம்பெண் அந்த வீடியோவில் அந்த இளம் பெண் பேசியது

இந்த பகுதியானது உபரி நீர் வெளியேறும் கால்வாய் ஆகும். தொடங்கும் இடம் அகலமானதாகவும் போக போக அது குறுகிறது. குறுகும் இடத்தில் ஒரு சர்ச் கட்டப்பட்டுள்ளது. இந்த சர்ச் தண்ணீர் செல்லும் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியே தற்போது நீரில் மிதக்கிறது.

,ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சர்ச் தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே புகார் தெரிவிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு அமுதா IAS அவர்கள் ஆக்கிரமித்துகட்டப்பட்டுள்ள சர்ச் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் தற்போது வரை அந்த ஆக்கிரமிப்பு இடம் அகற்றப்படவில்லை தற்போதாவது இதை கருத்தில் கொண்டு ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த தேவாலயத்தினை அகற்றி எங்களை காப்பாற்ற வேண்டும் என என் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த இளம் பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது பொதுமக்களின் நலனை காக்க அந்த சர்ச் அகற்றப்படுமா இல்லை சிறுபான்மை வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ள சர்ச்சை அகற்றாமல் பொதுமக்களை வஞ்சிப்பாரா விடியல் முதல்வர் என அரசியல் விமர்சகர்கள் விமரிசித்து வருகிறார்கள். இளம் பெண்ணின் துணிச்சலான வீடியோ லிங்க் : https://youtu.be/sMFL8egx8XA

Exit mobile version