தகப்பன் ஒருவன் அலட்சியத்தால அழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை இறந்தத காமிச்சு காமிச்சு காசு பாத்துச்சு செய்தி சேனல்கள் அப்பவும் நம்ம மீம்ஸ்ல தமிழக சுகாதாரத்துறைய அவ்வளவு கலாய்ச்சோம்…
அதேபோல இதையும் பதிவு செய்து நன்றி சொல்லனும்னு தோனுச்சு..
ஆமாங்க
இந்நாள் வரையில் கொரானா பாதிப்பு இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டுமே என்று இந்திய சுகாதாரத்துறை அறிக்கை அளித்துள்ளது.
இந்திய மாநிலங்களில் சிங்கப்பூர், தென்கொரியா, மலேசியா போன்ற நாடுகளுடன் அதிக வர்த்தகத் தொடர்புகளிலும் போக்குவரத்து தொடர்புகளிலும் தமிழகமே முதலில் இருக்கிறது. ஆயினும், அங்கிருந்து எந்த தொற்றும் பராவமால் இருப்பதற்கு அனைத்து தமிழக விமான நிலையங்களிலும் தமிழகச் சுகாதாரதுறையின் ஒரு பெரும்படையே தீயாக கண்காணித்துக் கொண்டிருக்கிறது. வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே, ஏன் உலகத்திற்கே பாடம் எடுப்பது தமிழக சுகாதாரத்துறையே. நீங்க நம்பவில்லை என்றாலும், கட்சிகளின் அடிப்படையில் வெறுப்புணர்ச்சியில் வெறுத்தாலும் அவர்தான் ஒரு தடுப்பு சுவராக அதிரடியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆம், அவர் பெயர் விஜயபாஸ்கர்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















