சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு தனி தீர்மானங்களின் மீதான விவாதத்தில் பேசிய கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏவானதி சீனிவாசன் தரமான பதிலடியை கொடுத்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானம் தேவையற்றது என ஆதாரங்களோடு பேசினார் வானதி சீனிவாசன்.
சட்டப்பேரவையின் மூன்றாவது நாளான இன்றைய தினம் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானங்களின் மீது நடைபெற்ற விவாதத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசினர். அப்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன், பேசியபோது ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் மேலும் பேசிய வானதி சீனிவாசன். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நிறைய கேள்விகள் எழத்தான் செய்யும். ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிடம் யார் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த தேர்தலிலேயே நிறைவேற்றப்போவதில்லை. சில உறுப்பினர்கள் தாங்களாகவே, தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். தனித்தீர்மானத்தில் உள்ள சாராம்சங்களை புரிந்து கொண்டிருப்பதாகவும், சீர்திருத்தமாக பார்க்க வேண்டும் ஒரு கட்சி ஆட்சி வந்துவிடுமோ எனக்கருதி தேவையற்ற பயத்தால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை தொடர்பாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தனி தீர்மானத்தில் இருக்கக்கூடிய கவலைகளை, அக்கறையை புரிந்து கொண்டு பா.ஜ.க நடவடிக்கை எடுக்கும்.
நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பாகம் 2 – 273 வது பக்கத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவதற்கு தனது ஆதரவான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார் கருணாநிதி. இந்த சூழலில் அந்த கருத்துக்களையும் மாநில அரசு எடுத்துக்கொண்டு இந்த தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என சேர்த்து கொள்ளவும் மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழுவிற்கும் இதை கொடுக்க வேண்டும் என தரமான பதிலடி கொடுத்துள்ளார் வானதி சீனிவாசன்.