சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தமில்லாமல் சேவாபாரதி அமைப்பினை தொடர்புபடுத்தி சில தேச விரோத சமூக விரோத சுயநல சக்திகள் அவதூறு பரப்பி வருகின்றன. திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த விஷயத்தில் சேவாபாரதி பற்றி கூறி, தனது அரசியல் அரைவேக்காட்டுத்தனத்தைவெளிப்படுத்தி உள்ளார்.
ஜாதீய அரசியல் சில சுய நல அரசியல்வாதிகளும் தனது வக்கிர புத்தியினை வெளிப்படுத்தி வருகின்றன. சேவாபாரதி பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்து கொண்டு வரும் அந்த தீயசக்திகளை சேவாபாரதி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் அந்த சமூக விரோத சக்திகளின் முகத்திரையை கிழிக்க சட்ட பூர்வமான நடவடிக்கைகளை சேவாபாரதி முன்னெடுத்துள்ளது.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தேசிய முன்னேற்றப் பணியில் தன்னை அர்பணித்து கொண்டு சேவை புரிந்து வரும் அமைப்பு சேவாபாரதி தன்னலமற்ற, தேசநலன் விழையும் பல லட்சக்கணக்கான தன்னார்வ தொண்டர்களின் சீரிய பணிகள் மூலமாக தேசப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறது.
சேவாபாரதி, சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களின் வாழ்வினில் முன்னேற்றம் கொண்டு வர நாடு முழுவதும் ஒன்னறை லட்சத்திற்கும் மேற்பட்ட சேவாகார்யங்களை தொடர்ந்து சேவாபாரதி நடத்தி வருகிறது.
கிராம முன்னேற்றம், சுயசார்பு ஆகிய நோக்கங்களை முன்வைத்து பல தொழிற்பயிற்சிகளை சேவாபாரதி வழங்கி வருகிறது. அதன் வாயிலாக பல லட்சம் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாட்டில் எப்பொழுதெல்லாம், எங்கெல்லாம் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகிறதோ அப்பொழுது அங்கு முதலில் களம் இறங்கி மீட்பு பணிகளை துவக்க தன்னலமற்ற சேவா காரியங்களை செய்வதில் அனைவருக்கும் முன்னோடியாக விளங்குவது சேவாபாரதி, உதாரணமாக சுனாமி ஆழிப்பேரலை வந்த போது, ஒக்கி புயல் மற்றும் கஜாபுயல், சென்னை வெள்ளம் வந்த காலங்களில் சேவாபாரதியின் பணி அளப்பரியது.
தற்போது ஏற்பட்டுள்ள கொராணா வைரஸ் தாக்கம் அதன் காரணமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கு, ஆகியவற்றின் காரணமாக, சாதாரண மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆனானார்கள். அவர்களது அன்றாட தேவையான உணவு மற்றும் உணவுப்பொருட்கள் இல்லாத நிலையில் அவர்களுக்கு பல வகைகளில் சேவாபாரதி தொண்டாற்றி உள்ளதை நாடறியும்.
தினசரி லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. பல்லாயிரம் குடும்பங்களுக்கு உணவு பொருட்களை வழங்கியது. பெருமளவில் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டது. பல இடங்களில் மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் காவல் பணியில் ஈடுபட்டு வந்த பலருக்கு உதவி வந்தது சேவாபாரதி, இவற்றையெல்லாம் கண்ணுற்ற பல்வேறு தரப்பு மக்களும் தற்போது சேவாபாரதியுடன் கைகோர்த்து பணி புரிய முன்வந்துள்ளனர்,
*இது கண்டு பொறுக்காமல் சில தேசவிரோத , சமூக விரோத சுயநல சக்திகள் சேவாபாரதிக்கு எதிராக பொய்யான பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. அதாவது சாத்தான்குளம் காவல் நிலைய விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான அவதூறுகளை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றன. அவ்வாறு அவதூறு பரப்பும் அந்த தீயசக்திகளை வன்மையாக சேவாபாரதி கண்டிக்கிறது. அந்த தீயசக்திகளின் சதித்திட்டத்தினை முறியடிக்க அதற்கான சட்ட பூர்வமான பணியினை சேவாபாரதி முன்னெடுத்துள்ளது.
*தலைவர்,
*சேவாபாரதி
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















