மாதம் ஒருவரின் உயிர்.. இலக்கு வைத்து செயல்படுகிறதா விடியல் அரசு? வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

சேலம் மாவட்டம் கருப்பூர் ஆதிதிராவிட தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவரை சேந்தமங்கலம் போலீசார் கடந்த 11ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட அவர் 12ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட இரவே உயிரிழந்தார். திமுக விடியல் ஆட்சியில் மாதம் ஒன்னு நடக்குது ஆனா மீடியா விவாதமில்லை?எந்த அரசியல் கட்சி தலைவர்களும் வாய் திறக்கவில்லை. திருமாவளவன் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் இறந்து போன பிரபாகரன் அவர்களுக்கு நியாயம் கேட்டு ஸ்டாலின் அரசை காட்டமான முறையில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

சேலம் மாவட்டம், கருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). மாற்றுத்திறனாளியான இவரை திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் கடந்த 11ஆம் தேதி கைது செய்து, அந்த மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 12ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் அன்று இரவே உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பிரபாகரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் வெளியிட்டுள்ள கண்டன அறிவிப்பில்: இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழகத்தில் மாதம் குறைந்தபட்சம் ஒருவராவது காவல்துறையினரின் அடக்குமுறை காரணமாக உயிரிழக்க வேண்டும் என்று இந்த அரசு இலக்கு ஏதும் வைத்துள்ளதா?

இன்று பிரபாகரன் அவர்களது குடும்பம் சிதைந்து கிடக்கிறது. வழக்கம் போல் சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு இடைநீக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு என்று கடந்து செல்வது மட்டும் அரசின் வேலை இல்லை.

காவல்துறை உங்கள் எதிரி என்று மாறுவதற்கு முன், காவல்துறையின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு அதற்கு தீர்வு காண ஒரு ஆணையம் அமைத்து அதன் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்துங்கள் @CMOTamilnadu அவர்களே என அண்ணாமலை காட்டமாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version