சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைதிறப்பு.

உலக புகழ்ப்பெற்ற சபரிமலை கோயிலில்,தமிழ் மற்றும் மலையாள மாதப் பிறப்புகளை ஒட்டி நடை திறக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று கோயிலின் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

ஐயப்பன் கோயில் தந்திரிகளான கண்டரு ராஜுவரு மற்றும் கண்டரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைக்க உள்ளார்.

கோயிலில் உள்ள கற்பூர ஆழியில் தீபம் ஏற்றியதும் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.

இன்று திறக்கப்படும் கோயில் நடை, வரும் 21ம் தேதி வரை திறந்து இருக்கும் எனவும், சிவில் தரிசனம் மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

Exit mobile version