16-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 21-6-2021 திங்கள்கிழமை ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. அன்று தொடங்கி (24-6-2021) வரை 4 நாள்கள் நடைபெற்றது இதில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டார்கள். சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினை புகழும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது எனவும் பா.ஜ.கவை விட குறைந்த எண்ணிக்கை கொண்ட கட்சியினருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது எனவும் எனக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்கவில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதமாக வானதி சீனிவாசன் திமுகவிற்கு பல கேள்விகளை எழுப்பி வந்துள்ளார் கோவையின் பிரச்சனைகளை டெல்லி வரை எடுத்து சென்றார். தமிழகத்திற்கு தேவையான ஆக்ஜிசன் பெறுவதில் முனைப்பு காட்டிவந்தார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கும் இவருக்கும் ஒரு போர் நடைபெற்று வானதியை பிளாக் செய்தார். அந்த அளவிற்கு வானதி சீனிவாசன் திமுகவை வறுத்தெடுத்துள்ளார் வானதி சீனிவாசன். இந்த நிலையில் தான் அவர் கலந்து கொண்ட சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். வானதி சீனிவாசன் அவர்கள்.
அவர் கூறியிருப்பதாவது:
கல்லூரிக் காலம் முதல் பொதுவாழ்வில் இருந்தாலும் சட்டமன்றம் எனக்குப் புதிது. கடந்த மே 11-ம் தேதி கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்க முதல் முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தேன். மறுநாள் சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நிகழ்வுகளை ஆர்வமுடன் கவனித்தேன். அதன்பிறகு 16-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் 21-6-2021 திங்கள்கிழமை ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. அன்று தொடங்கி இன்று (24-6-2021) வரை 4 நாள்கள் நடைபெற்ற சட்டமன்ற நிகழ்வுகளில் முழுமையாகப் பங்கேற்றேன்.
பாஜகவுக்கு 4 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதால் சட்டமன்றக் குழுத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமே பேச வாய்ப்பு கிடைத்தது. ஒன்றிய அரசு என்றழைப்பதன் நோக்கம் குறித்து அவர் கேள்வி எழுப்ப, அதற்கு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
23-6-2021 புதன்கிழமை பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் வரிகள், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து மத்திய அரசு மீது குற்றம்சாட்டி நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் பேசினார். பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதிக்கும் வரிகள் குறித்து குறிப்பிட்ட அவர், தமிழக அரசு விதிக்கும் வரி எவ்வளவு? என்பதைக் கூறவில்லை. இதுபற்றி விளக்கமளிக்க அனுமதி கோரினேன் அனுமதி கிடைக்கவில்லை.
ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று (24-6-2021) பதிலளித்துப் பேசினார். 43 நிமிடங்கள் அவர் பேசினார்.
கரோனாவுக்கு பிந்தைய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு அமைக்கப்படும், செய்யாறு, திண்டிவனம் ஆகிய இடங்களில் பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும், இந்து ஆலயங்களை சீரமைக்க ரூ. 100 கோடி போன்ற சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்பிறகு அமைச்சர்கள் திரு. பி.கே.சேகர்பு, திரு. தங்கம் தென்னரசு, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வென்ற திரு. தி.வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் திரு. எம்.எச்.ஜவாஹிருல்லா, சட்டமன்ற மார்க்சிஸ்ட் குழுத் தலைவர் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் குழுத் தலைவர் திரு. ராமச்சந்திரன், சட்டமன்ற பாமக குழுத் தலைவர் திரு. ஜி.கே.மணி, சட்டன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு.செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குழுத் தலைவர் திரு. சிந்தனைச்செல்வன், திமுக உறுப்பினர் முன்னாள் அமைச்சர் திருமதி தமிழரசி என்று பலரும் முதலமைச்சரின் பதிலுரையையும், அறிவிப்புகளையும் பாராட்டிப் பேசினர்.
இறுதியாக சட்டப்பேரவை முன்னவரும், நீர்வளத் துறை அமைச்சருமான திரு. துரைமுருகன் எல்லோரையும் மிஞ்சும் அளவுக்கு புகழ்ந்து தள்ளிவிட்டார். அதன்பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தனது பதிலுரையில், “கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட போராட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும்” என்றார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த கடந்த 48 நாள்களில் ஆட்சிக்கு எதிராக சற்றே காட்டமான விமர்சனங்களை வைத்த பலர் குறிப்பாக பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
இது கருத்துச் சுதந்திரத்தில் வராதா? விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் இன்னும் திமுகவிற்கு இல்லை என்பதையை இது காட்டுகிறது. இந்த 4 நாள்களில் சட்டமன்றத்தில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் பாஜகவைவிட குறைந்த எண்ணிக்கை கொண்ட கட்சியினருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. அடுத்தடுத்த கூட்டத் தொடர்களில் அரசைப் புகழ்பவர்களுக்கும் மட்டுமல்ல, தவறுகளை சுட்டிக்காட்டும், நல்ல ஆலோசனகளை வழங்க காத்திருக்கும் பாஜக உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். சட்டமன்றத்தில் 4 நாள்கள் நல்ல அனுபவம். வாய்ப்பளித்த கோவை தெற்கு மக்களுக்கு இதயங்கனிந்த நன்றி!. என தெரிவித்துள்ளார்.
மேலும் இவருக்கு வாய்ப்பு அளித்தால் புள்ளி விவரங்களோடு பேசி விடுவாரோ என்ற பயத்தில் தான் சட்டமன்றத்தில் பேச அனுமத்திக்கவில்லை என பாஜக மற்றும் அதிமுகவினர் பேசி வருகிறார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















