Monday, May 12, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மோடி அரசின் மேலும் ஒரு மைல்கல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணம் வெற்றி.

Oredesam by Oredesam
August 9, 2021
in இந்தியா, செய்திகள்
0
மோடி அரசின் மேலும் ஒரு மைல்கல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணம் வெற்றி.
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த முன்பு உள்நாட்டிலே ஆயுதங்கள் போர் விமானங்கள்,கப்பல் உள்ளிட்ட பாதுகாப்பு சார்ந்த பொருட்க்களை நாட்டிலே தயாரிக்கும் பணி தீவிரமாக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘விக்ராந்த்’ தனது முதல் கடல் பயணத்தை வெற்றிகரமாக இன்று முடித்தது. இதற்காக இந்த கப்பல் கொச்சியிலிருந்து கடந்த 4ம் தேதி புறப்பட்டது.  கடல் பரிசோதனைகள் திட்டமிடப்பட்டபடி நடந்தன. இயந்திரங்களின் அனைத்து செயல்பாடுகளும் திருப்தியை அளித்தன. இந்திய கடற்படையிடம் இந்த கப்பல் ஒப்படைப்பதற்கு முன்பாக, இந்த கப்பலில் உள்ள அனைத்து சாதனங்கள் மற்றும் கருவிகள் சரியாக செயல்படுகிறதா என்பதை நிரூபிப்பதற்காக, இந்த கப்பல் இன்னும் பல கட்ட கடல் பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.

READ ALSO

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘விக்ராந்த்’ என்ற இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்,  இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்குனரகத்தால்(DND) வடிவமைக்கப்பட்டு,  கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான கொச்சி கப்பல்கட்டும் நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த கப்பலில் 76 சதவீதத்துக்கும் அதிகமாக உள்நாட்டு தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், தற்சார்பு இந்தியா மற்றும் இந்திய கடற்படையின் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு முன்மாதிரியாக இந்த விமானம் தாங்கி போரக்கப்பல் உள்ளது.

முதல்முறை கடல்பயணத்தின்போது, இன்ஜின் செயல்பாடு, மின் உற்பத்தி மற்றும் விநியோகம் மற்றும் துணைக் கருவிகள் உட்பட கப்பலின் செயல்பாடுகள் பரிசோதித்து பார்க்கப்பட்டன.

இந்த கடல் பயண பரிசோதனைகளை, கடைசி நாளில் கடற்படையின் தெற்கு கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் ஏ.கே.சாவ்லா ஆய்வு செய்தார். கடல் பரிசோதனைகள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்டன, அனைத்து பரிசோதனைகளும் திருப்தி அளித்தன. கொரோனா தொற்றுக்கு இடையிலும், கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு, இந்த கடல் பயண பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது, அனைத்து தரப்பினரின் முயற்சிக்கு சான்றாக உள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க மாபெரும் நடவடிக்கை.

கடற்படையிடம், 2022ம் ஆண்டு  ஒப்படைக்கும் முன்பாக, இந்த கப்பல் தொடர் கடல் பரிசோதனைகளை மேற்கொள்ளும்.

ShareTweetSendShare

Related Posts

BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025
Pak
இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
HQ 9 சிஸ்டம்
இந்தியா

சீன தயாரிப்பை நம்பி இறங்கிய பாகிஸ்தான்! வேலையை காட்டிய சைனா தயாரிப்பு… சீனாவை மொத்தமா முடிச்சுவிட்ட இந்தியா!

May 7, 2025
operation sindoor
இந்தியா

பாரதி கண்ட புதுமை பெண்களை வைத்து பாக்.ஐ பந்தாடிய இந்தியா! யார் இந்த சோபியா குரேசி, வியோமிகா சிங்.!

May 7, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !

தூத்துக்குடியில் டெல்லியில் இருந்து திரும்பிய நபரால் கொரோனா – மூதாட்டி உயிரிழப்பு! அதிர்ச்சி தகவல்

April 11, 2020
அடடே அடுத்த சம்பவம் தி.மு.க வெற்றி பெற்றதுக்கு இஸ்லாமிய மக்கள் தான் காரணமாம்! வைரலாகும் அடுத்த வீடியோ

அடடே அடுத்த சம்பவம் தி.மு.க வெற்றி பெற்றதுக்கு இஸ்லாமிய மக்கள் தான் காரணமாம்! வைரலாகும் அடுத்த வீடியோ

July 30, 2021
தீவிரவாத அமைப்பான தாலிபான்களுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் அமீர்! வைரலான  வீடியோ! நடவடிக்கை பாயுமா?

தீவிரவாத அமைப்பான தாலிபான்களுக்கு ஆதரவாக பேசிய இயக்குனர் அமீர்! வைரலான வீடியோ! நடவடிக்கை பாயுமா?

August 18, 2021
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்

தமிழகத்தில் தரமான மத்திய அரசின் சாலைகள் நன்றி தெரிவித்த வானதிசீனிவாசன் எம்எல்ஏ

September 18, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x