உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உலகம் முழுவர்க்கும் சுமார் 30 லட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த்துள்ளார்கள். இந்த நிலையில் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலைகளில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றார்கள். இந்த நிலையில் கொரோன பாதித்தவர்களுக்கு னாய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவு வகைகள் விட்டமின் சி மாத்திரைகள் கொடுத்து வருகின்றார்கள். கொரோனாவிற்கு மருந்து நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் சமூக இடைவெளி சுத்தம் இந்த மூன்றும் தான் தற்போதைய மருந்து, அதுமட்டுமில்லை இது அனைத்து நோய்களுக்கும் மருந்தும் இதுதான்,
இந்த நிலையில் மருத்துவ ஆராய்ச்சிக்கான வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் மூத்த இந்திய துணை இயக்குநராக உள்ள விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன் கொரோனா குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார் அவர் கூறியதாவது: இந்தியர்கள் உட்பட தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்கள் பரம்பரை ரீதியாக நன்கு பாதுகாக்கப்பட்டவர்கள். அவர்கள், வைரஸ் நோய்களுக்கு எதிராக போராட வலுவான, சக்திவாய்ந்த மரபணுக்களை கொண்டுள்ளனர். 2003 ஆம் ஆண்டு சார்ஸ் வைரஸ் பரவிய தருணத்தில், மற்ற நாடுகளில் ஏராளமான கொடுமையான பாதிப்புகள் இருந்தன. ஆனால் இந்தியா சிறிய அளவிலேயே பாதிக்கப்பட்டிருந்தது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகபிள் டிசைஸஸ் வெளியிட்ட குறிப்பின்படி, ஏப்ரல் 9, 2003 வரை, இந்தியாவில் சார்ஸ் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், கோவிட்-19 மற்றும் SARS CoV-2, வைரஸ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது.
சில நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவதில் உணவுப் பழக்கமும் ஒரு பங்கு வகிக்கிறது. தென்னிந்தியாவில், நம் உணவில் ‛ரசம்’ சேர்த்து வருகிறோம். அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொண்ட பூண்டு, மிளகு, வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுவதால் அவை நுரையீரலை பாதுகாக்கின்றன. இது பல வைரஸ் நோய்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகிறது. இந்த ரசம், பல ஆண்டுகளாக நம் உணவில் சேர்க்கப்படுகிறது.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், தமிழகம் மற்றும் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு தான். அதேபோல், தொற்று பாதிப்பு அதிகரிக்க புவியியல் இருப்பிடமும் ஒரு பங்கு வகிக்கிறது. அதாவது, மக்கள்தொகை அடர்த்தியான நகர்ப்புறங்களில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது, மக்கள்தொகை குறைவான நாகப்பட்டினம், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் குறைவான பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார். எனவே பாரம்பரிய உணவு வகைகளை கடைபிடிப்போம், பாரம்பரியத்தை மீட்போம் வரும் காலங்களில் நோய் நொடியின்றி வாழ்வோம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















