பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே,
இதுவரை 1,405 டேங்கர்களில் 23,741 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்துள்ளது.
இதுவரை 344 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவ ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.
ஜார்கண்டில் இருந்து 8025 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனும், ஒடிசாவில் இருந்து 7102 மெட்ரிக் டன்னும், குஜராத்தில் இருந்து 6384 மெட்ரிக் டன்னும், மேற்கு வங்கத்தில் இருந்து 1360 மெட்ரிக் டன்னும், மகாராஷ்டிராவில் இருந்து 488 மெட்ரிக் டன்னும், சத்தீஸ்கரில் இருந்து 218 மெட்ரிக் டன்னும் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து 164 மெட்ரிக் டன்னும் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் மூலம் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன.
தற்போது 22 டேங்கர்களில் 420-க்கும் அதிகமான மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் 6 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன.
தென்மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவுக்கு தலா 2,000 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக திரவ மருத்துவ பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, உத்தரகாண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன.
இதுவரை தமிழகத்திற்கு 2,347 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5692 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2135 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 2674 மெட்ரிக் டன், உத்தரகாண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 2279 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2026 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 320 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.