இந்தியாவில் பாகிஸ்தானில் இருப்பதை போலவே உணர்கிறோம் : பாகிஸ்தான் ஹாக்கி அணி பயிற்சியாளர்.

இந்தாண்டு நடைபெறும் 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடருக்காகச் இந்தியா வந்துள்ளது பாகிஸ்தான் ஹாக்கி அணி. 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிகள் சென்னையில் நடைபெறுகிது. இந்நிலையில், சென்னை வந்துள்ள பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் முகமது சக்லைன், மத்திய அரசின் ஏற்பாடுகள் மற்றும் மக்களின் அன்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அவர் கூறுகையில் இந்திய மக்கள் பேரன்பு மிக்கவர்களாக உள்ளனர். நாங்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருப்பதைப் போலவே உணர்கிறோம். இங்கே உணவுகளும் சிறப்பாக இருக்கின்றன. மட்டன் பிரியாணியைப் பார்த்தவுடன் எங்கள் வீரர்கள் சந்தோசமாகிவிட்டார்கள்” மேலும் இந்திய அரசிற்கு நன்றி என மகிழ்ச்சியாகக் கூறினார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version