இந்த வாரம் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் டிஜிட்டல் கூட்டத்தில், இந்தியா பாகிஸ்தானை கண்டித்தது. பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் தந்தையாக இருக்கும் நிலையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவதாக பாகிஸ்தான் நடிப்பதாக இந்தியா கூறியது. அண்டை நாடான பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் உற்பத்தி மையமாகும் என்றும் ஐநா சபையால் தடைசெய்யப்பட்ட ஏராளமான பயங்கரவாதிகள் சுதந்திரமாக உள்ளனர் என்றும் இந்தியா தெளிவாகக் கூறியது.
பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி காஷ்மீர் பிரச்சனை பற்றி குறிப்பிட்டு, தெற்காசியாவில் ஒரு நாடு சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் சட்டங்கள் மாற்றி, தீவிரமான தேசியவாதத்தை ஊக்குவிப்பதாக, மறைமுகமாக இந்தியாவை குற்றம் சாட்டினார். இதையடுத்து, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விகாஸ் ஸ்வரூப் உடனடியாக கடுமையாக பதிலளித்தார். காமன்வெல்த் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில், ஸ்வரூப் வெளியுறவு அமைச்சர் எஸ்.கே. ஜெய்சங்கரின் பிரதிநிதியாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவராக முழு உலகமும் அறிந்த ஒரு நாடு, பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டவராக நடிப்பது ஆச்சரியமல்ல. 49 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த மக்களை படுகொலை செய்த நாடு” இதை கூறுகிறது என்று அவர் உடனே பதிலடி கொடுத்தார்.
‘பயங்கரவாதத்தின் மைய புள்ளி’ என்ற அழைக்கப்படும் அதே நாடு தான் ஐக்கிய நாடுகள் சபையால் தடைசெய்யப்பட்ட ஏராளமான பயங்கரவாதிகளை பாதுகாத்து வைத்திருக்கிறது என்று ஸ்வரூப் கூறினார். இது தவிர, சட்ட விரோதமாக ஒரு பகுதியை ஆக்கிரமித்து கொண்டு அதை “சர்ச்சைக்குரிய பிரதேசம்” என்று பாகிஸ்தான் கூறி வருவது வினோதமான செயல் எனக் குறிப்பிட்டார்.
இது தவிர, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆசியா சொசைட்டி மேடையில் பேசுகையில், பாகிஸ்தானும் அதன் அரசாங்கமும் பயங்கரவாதத்தை தங்கள் சொந்த கொள்கையாக ஏற்றுக்கொண்டுள்ளன, எனவே அவர்களுடன் சாதாரண உறவு கொள்வது மிகவும் கடினம் என்று கூறினார். காஷ்மீரின் மறுசீரமைப்பு ஒரு ‘உள் விவகாரம்’ என்று தெளிவான செய்தியை கொடுத்தார்.
ஜம்மு காஷ்மீரில் 370வது சட்ட பிரிவு அகற்றப்பட்டு, அங்கு நிலைமை மேம்பாடு வருகிறது என்றும், உலக நாடுகள் இந்திய பக்கம் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும், இந்த விஷயத்தில் பாகிஸ்தானிற்கு ஆதரவு திரட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மேற்கொண்ட முயற்சி படுதோல்வியில் தான் முடிந்தது.
பயங்கரவாதத்தின் தந்தையான பாகிஸ்தான், தான் பயங்கரவாத்தில் பாதிக்கப்பட்டுள்ளதைப் போல் நடிக்கிறது என்றூம், பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















