சர்வதேச நீதிமன்றத்தை கெஞ்சும் பாகிஸதான். உலகமே இந்தியாவுக்கு ஆதரவு!. பாகிஸ்தானின் சோலியை முடித்த இந்தியா

Indus Pakistan

Indus Pakistan

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக இந்தியா அறிவித்து இருப்பது பாகிஸ்தானின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதனால் மிரண்டு போயிருக்கும் பாகிஸ்தான், சர்வதேச மன்றங்களை நாடி இதற்கு தீர்வு காணலாம் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. ஆனால், சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவுக்கே எல்லா விஷயங்களும் சாதகமாக இருப்பது தெரியவந்துள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. பயங்கரவாதத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி – வாகா எல்லை மூடல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனால், பாகிஸ்தான் அலறி வருகிறது. குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என்ற இந்தியாவின் அறிவிப்பு பாகிஸ்தானின் தூக்கத்தை கெடுத்துள்ளது. பாகிஸ்தான் விவசாயத்தில் 80 சதவீதம் சிந்து நதி நீரை நம்பியே உள்ளது. அதேபோல, முக்கியமன குடிநீர் ஆதாரமாகவும் இந்த நதி உள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக அடாவடி கருத்துக்களையும் பேசி வருகிறது.

இதுபோக இந்தியாவுக்கு எதிராக சர்வதேச மன்றங்களில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாம். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பொறுத்தவரை கடந்த 1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ம் தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் கையெழுத்து இடப்பட்டது. இந்த உடன்படிக்கையில் அப்போதைய இந்திய பிரதமர் நேரு, பாகிஸ்தான் பிரதமர் முகமது அயூப்கான், உலக வங்கி சார்பில் இலிப் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

3 முறை போர்
இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியா மற்றும் இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் 6 ஆறுகளை பயன்படுத்துவது தொடர்பாக தீர்வு காணப்பட்டது. மேற்கு ஆறுகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய 3 ஆறுகளின் உரிமை பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆறுகளின் நீரை இந்தியா மின் உற்பத்தி போன்ற திட்டங்கள் மற்றும் குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.

கிழக்கு ஆறுகளான ரவி, பியாஸ், சட்லஜ் ஆகிய 3 ஆறுகளின் நீர் முழுவதையும் இந்தியா பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நதிகளில் இருந்து எவ்வளவு நீரை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம் என்பதே இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம் ஆகும். இந்தியா – பாகிஸ்தான் இடையே, 1965,1971 மற்றும் 1999 என மூன்று முறை போர் நடைபெற்றுள்ளது. ஆனாலும் இந்த ஒப்பந்தம் நீர்த்து போகாமல் இருந்தது.

4 அம்ச திட்டங்கள்
ஆனால், சமீபத்தில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் இந்தியாவை கடுமையாக கோபம் அடைய வைத்தது. இதனால் சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. சிந்து நதி நீரில் தண்ணீரை திருப்பிவிட்டால் அதை போராகவே கருதுவோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. அந்த அளவுக்கு பாகிஸ்தானை சிந்து நதி ஒப்பந்தம் ரத்து பாதிக்க உள்ளது.

எனவே இதனை எதிர்கொள்ள பாகிஸ்தான் 4 அம்ச திட்டத்தை வைத்து இருக்கிறதாம். அதாவது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக மூன்று வகையான லீகல் ஆப்ஷன்களை வைத்து இருப்பதாக பாகிஸ்தான் சட்ட அமைச்சர் அகீல் மாலிக் கூறியுள்ளார். இதில் உலக வங்கியிடம் இந்த பிரச்சினையை எழுப்புவதும் அடங்கும்.

சர்வதேச நீதிமன்றத்தை நாட முடிவு
நெதர்லாந்து நாட்டின் ஹாக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்திடம் இந்த பிரச்சினையை எடுத்துச் செல்லவும் பாகிஸ்தான் திட்டமிட்டு இருக்கிறது. 1969 வியன்னா கன்வென்ஷன் சட்ட ஒப்பந்தத்தை இந்தியா மீறிவிட்டதாக கூறி சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டுள்ளது.

அதுமட்டும் இன்றி ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்த பிரச்சினையை கொண்டு செல்ல பாகிஸ்தான் திட்டமிட்டு இருக்கிறதாம். இந்தியாவுக்கு எதிராக அனைத்து வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம் என்றும் பொருத்தமான சர்வதேச மன்றங்களில் இதை எடுத்து செல்வோம் எனவும் பாகிஸ்தான் சட்ட அமைச்சர் கூறினார். சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்ய முடியாது எனவும் ஒப்பந்தத்தில் அப்படியான ஒரு அம்சம் இல்லை எனவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் முயற்சி வீண் தான் அடையும்
சிந்து நதி நீர் விவகாரத்தில் பாகிஸ்தான் முயற்சிகள் எதுவும் அந்த நாட்டிற்கு கை கொடுக்காது என்றே சொல்லப்படுகிறது. சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பு என்பது முற்றிலும் நாடுகளின் ஒப்புதலை அடிப்படையாக கொண்டது. உலகளாவிய கடமையாக அது இல்லை. சர்வதேச நீதிமன்றங்களை ஏற்றுக்கொள்கிறோம் என்று நாடுகள் பகுதியாகவோ அல்லது முழுமையாக அறிவிக்க வேண்டும்.

சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்பை கட்டாயத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வதாக கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா அறிவித்தது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கையெழுத்திட்ட பிரகடனத்தில், சர்வதேச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் வராத 13 விதிவிலக்குகளை இந்தியா பட்டியலிட்டுள்ளது. இந்த 13 விதி விலக்கு பட்டியலில் இரண்டாவது பாயிண்டில், ஒரு முக்கியமான அம்சம் உள்ளது.

உலக வங்கிக்கு அதிகார வரம்பு?
அதாவது, காமன்வெல்த் நாடுகளில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு இடையே ஏற்படும் எழும் பிரச்சினைகளில் சர்வதேச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று உள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், பாகிஸ்தான் காமன்வெல்த் கூட்டமைப்பு நாடாக உள்ளது. எனவே, சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்தியாவை பாகிஸ்தானால், இழுத்து செல்ல முடியாது. அதிகார வரம்பு இல்லையென்பதால், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் முயற்சி செல்லாததாகவே அமையும்.

அதுபோக ஆயுத மோதல்கள், பகைமை சூழல்கள் போன்ற பிரச்சினைகளில் சர்வதேச நீதிமன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை. அதுபோல உலக வங்கிக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் எந்த அதிகார வரம்பும் இல்லை. இந்த ஒப்பந்தத்தில், இரு தரப்பிற்கும் மத்தியஸ்தர் அல்லது ஆலோசகர் என வரையறுக்கப்பட பங்கை மட்டுமே உலக வங்கி வகித்தது. ஒப்பந்தத்தின் கண்காணிப்பாளராக உலக வங்கி இல்லை. கருத்து வேறுபாடு ஏற்படும் நேரத்தில் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க மட்டும் முடியும். 1960 ஒப்பந்தத்திலும் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மத்தியஸ்தராகவே உலக வங்கி செயல்பட்டது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்பதால் பாகிஸ்தான் திட்டம் தவிடுபொடியாகி உள்ளது. இதனால் பாகிஸ்தான் மொத்தமாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version